Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2600 வது கோல்.. சாதனை படைத்த போலாந்து வீரர்.. 36 ஆண்டுகளுக்கு பிறகு அசத்தல்..சவுதியின் வாய்ப்பு வீண்

தோஹா : ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி ஆட்டத்தில் போலாந்து அணியும், சவுதி அரேபியாவும் மோதியது.

அர்ஜென்டினாவை வீழ்த்திய உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் சவுதி களமிறங்கியது. ஆனால், அந்த ஆட்டத்தின் மூலம் கிடைத்த பலத்தை சவுதி வீணடித்தது.

Star player Robert Lewandowski registered first fifa world cup goal as Poland beat Saudi arabia

ஆட்டத்தில் 39வது நிமிடத்தில் போலாந்து அணி தங்களது கூட்டு முயற்சி மூலம் முதல் கோல் அடித்தது. இதன் மூலம் மைதானத்தில் இருந்த சவுதி அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இத்னைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் சவுதிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. எனினும் சவுதி வீரர்கள் அடித்த பந்தை போலாந்து போல்ந்து கோல் கீப்பர் Szczesny அபாரமாக தடுத்தார்.

இதனால் போலாந்து கோலை சமன் செய்யும் வாய்ப்பு சவுதிக்கு வீணானது. இதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் பிற்பாதியில் 82 வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ராபர்ட் லிவான்டோஸ்கி தனது முதல் கோலை அடித்தார். ஒரு ஆண்டில் அதிக கோல் அடித்த சாதனை படைத்த லிவான்டோஸ்கிpயன் முதல் உலககோப்பை கோல் இதுவாகும்.

மேலும் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட 2600வது கோல் இதுவாகும். இதன் மூலம் போலாந்து அணி 2க்கு0 என்ற கணக்கில் வென்று, 36 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு எற்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற துனிசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக அந்த அணியை வீழ்த்தியது.

Story first published: Sunday, November 27, 2022, 0:00 [IST]
Other articles published on Nov 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+