Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களை மதிக்கும் இப்படி ஒரு அணியா? இங்கிலாந்தில் நெகிழ்ச்சி சம்பவம்.. உருக்கமான ரசிகர்கள்

இந்தியாவில் விளையாட்டு போட்டிகளுக்கு ரசிகர்கள் உயிரை கொடுப்பார்கள். கிரிக்கெட் கால்பந்து என ஒவ்வொரு விளையாட்டுத் தொடருக்கும் பல ரசிகர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

தற்போது வெளிநாட்டு பாணியில் இந்தியாவிலும் ஐபிஎல், ஐ எஸ் எல் போன்ற பல விளையாட்டு தொடர்கள் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளை எல்லாம் ரசிகர்கள் வேலையை விட்டு பின் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பார்கள்.

Stevenage manager Steve Evans

ஆனால் அவர்களை இந்த அணிகள் எல்லாம் மதிக்குமா என்று கேட்டால் பெரிய கேள்வி குறிதான். குறிப்பாக இந்திய மைதானங்களில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு கூட ஏற்ற வசதிகள் இருக்காது. ஆனால் இங்கிலாந்தில் ஸ்டீவன்ஏஜ் கால்பந்து அணி என்ற ஒரு அணி தனது ரசிகருக்கு செய்த காரியம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இங்கிலாந்து கால்பந்து லீக்கின் மூன்றாவது பிரிவில் இருக்கும் அணி தான் ஸ்டீவன்ஏஜ் கால்பந்து அணி. இந்த அணியின் ரசிகரான ஆலி காட்ஃபில்ட் என்பவர் ஸ்டீவன்ஏஜ் கால்பந்து அணி விளையாடும் போட்டியை பார்த்துவிட்டு காரில் வீடு திரும்பும் போது பெரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருடைய நண்பர் லியாம் ஷார்பே தற்போது கோமாவில் உயிருக்கு போராடி வருகிறார்.

இந்த நிலையில் ஸ்டீவெனஜ் தற்போது அடுத்த லீக் ஆட்டத்தில் பிளாக்புல் அணியுடன் தங்களது நகரில் மோதியது. அப்போது போட்டி தொடங்குவதற்கு முன்பு கோமாவில் இருந்து ரசிகர் லியான் ஷார்பே மீண்டு வர வேண்டி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஒரு நிமிடம் கைதட்டி உற்சாகப்படுத்தினர். மேலும் உயிரிழந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த போட்டியில் ஸ்டீவனெஜ் அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் அடுத்து அணியின் மேலாளர் ஸ்டீவநெஜ் இந்த வெற்றியை உயிரிழந்த ரசிகருக்கு சமர்ப்பிப்பதாக கூறி அனைவரையும் நெகழ்ச்சியில் ஆளாக்கினார். இந்தப் போட்டியில் 85 வது நிமடத்தில் ஸ்டீவனெஜ் அணி ஒரு கோல் அடித்தது. ஆனால் இந்த கோல் பவுல் என்றும் அதனை நடுவர்கள் அனுமதித்தது ஆச்சரியம் அளிப்பதாகவும் ப்ளாக்ஃபுல் அணியின் மேலாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து தாம் நடுவரிடம் முறையிட்டபோது, ஆம் நான் அதை பார்த்தேன் .இதுகுறித்து சம்பந்த வீரர்களிடம் தெரிவித்திருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இந்த கோலை அவர்கள் திரும்ப பெறவில்லை .இதன் மூலம் நாங்கள் தோல்வியை தழுவி இருக்கிறோம். இந்த ஆட்டத்தில் நடுவர்கள் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்

Story first published: Sunday, February 4, 2024, 16:20 [IST]
Other articles published on Feb 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+