Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.எஸ்.எல்.: சென்னை அணிக்காக நேரு ஸ்டேடியம் வரும் சூப்பர் ஸ்டார்கள் ரஜினி, அமிதாப் பச்சன்

சென்னை: இன்று சென்னையில் நடக்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் கேரளா அணியை எதிர்த்து விளையாடும் சென்னை அணியை அமிதாப் பச்சனுடன் சேர்ந்து ரஜினியும் ஊக்குவிக்கிறார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சென்னை அணி ஏற்கனவே கோவா அணியை தோற்கடித்துள்ளது. சென்னை அணியின் உரிமையாளர்கள் நடிகர் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் வீரர் டோணி ஆவர். இந்நிலையில் சென்னை அணியும் சச்சின் டெண்டுல்கரின் கேரள அணியும் மோதும் ஆட்டம் சென்னை ஜவஹர்லால் நேரு அரங்கில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியை காண அபிஷேக்கின் தந்தை அமிதாப் பச்சன் சென்னை வந்துள்ளார். அவர் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சென்னை கால்பந்து அணியை ஊக்குவிக்க சென்னைக்கு வந்துள்ளேன். நண்பர் ரஜினிகாந்தும் ஸ்டேடியத்திற்கு வருகிறார். நன்றி ரஜினி என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, October 21, 2014, 17:55 [IST]
Other articles published on Oct 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+