Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபாவில் நடந்த கூத்து... ஸ்வீடன் காட்டியது கெத்து.... போகிற போக்கில் ஜெர்மனிக்கு வைத்தது ஆப்பு!

எகாடரின்பர்க்: ஃபிபா உலகக் கோப்பையில் எப் பிரிவில் நடந்த ஆட்டத்தில் மெக்சிகோவை 3-0 என ஸ்வீடன் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென்கொரியாவுடன் டிரா செய்தது. அதனால் இந்தப் பிரிவில் இருந்து மெக்சிகோ மற்றம் ஸ்வீடன் நாக் அவுட் முன்னேறின.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிகின்றன. எப் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் கொரியாவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ, ஸ்வீடன் மோதின.

ஸ்வீட் வெற்றி

ஸ்வீட் வெற்றி

எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்திலேயே ஜெர்மனிக்கு அதிர்ச்சி கிடைத்தது. மெக்சிகோ 1-0 என ஜெர்மனியை வென்றது. ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது. பிரிவின் மூன்றாவது ஆட்டத்தில் மெக்சிகோ 2-1 என தென்கொரியாவை வென்றது. ஜெர்மனி 2-1 என ஸ்வீடனை வென்றது.

டாப்பில் மெக்சிகோ

டாப்பில் மெக்சிகோ

மெக்சிகோ 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஜெர்மனி, ஸ்வீடன் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. இரண்டு தோல்விகளை சந்தித்தத தென் கொரியா பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகிறது. இன்று நடக்கும் ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி, ஸ்வீடன் களமிறங்கின.

ஷாக் கொடுக்குமா

ஷாக் கொடுக்குமா

இன்று நடக்கும் ஆட்டத்தில் மெக்சிகோவை ஸ்வீடன் வென்றால், இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் இருக்கும். மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியாவை நடப்பு சாம்பியன் ஜெர்மனி வென்றால், அதுவும் 6 புள்ளிகளுடன் இருக்கும். அதனால் எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற குழப்பம் ஏற்படும் நிலை இருந்தது.

கலக்க வெற்றி

கலக்க வெற்றி

வென்றாக கட்டாயத்தில் களமிறங்கிய ஸ்வீடன் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. மெக்சிகோ அணியின் ஆதிக்கமே இருந்தபோதும், ஸ்வீடன் முட்டி மோதியது. முதல் பாதி கோல் ஏதும் அடிக்காமல் முடிந்த நிலையில், 50வது நிமிடத்தில் அகஸ்டின்சன் கோலடிக்க ஸ்வீடன் 1-0 என முன்னிலை பெற்றது. 62வது நிமிடத்தில் கிரான்குவிஸ்ட் கோலடிக்க 2-0 என முன்னிலை பெற்றது. 74வது நிமிடத்தில் மெக்சிகோவின் அல்வாரெஸ் சேம் சைடு கோலடிக்க, 3-0 என ஸ்வீடன் வென்றது. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு மெக்சிகோ மற்றும் ஸ்வீடன் முன்னேறின.

Story first published: Wednesday, June 27, 2018, 22:12 [IST]
Other articles published on Jun 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+