For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆவ்வ்வ்வ்... ஒரு வழியா முடிச்சாங்கப்பா.... சுவிஸை 1-0 என வென்றது ஸ்வீடன்!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் நாக் அவுட் சுற்றில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து சந்திக்கின்றன.

Recommended Video

50வது ஆட்டம்..சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஸ்வீடன் வெற்றி பெறுமா!- வீடியோ

சமாரா: இந்த கால்பந்து உலகக் கோப்பையில் மிகவும் போரடிக்க வைத்த ஆட்டமாக ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆட்டம் அமைந்தது. உலகக் கோப்பையில் தனது 50வது ஆட்டத்தில் ஸ்வீடன் மந்தமாக விளையாடினால், சுவிட்சர்லாந்து அதைவிட மோசமாக விளையாடியது. ஆட்டத்தின் குறிப்பிடும்படியான ஒரே விஷயம் 66வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோல் மட்டுமே. அதன் மூலம் 1-0 என ஸ்வீடன் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

காலிறுதிக்கு முன்னேறின

காலிறுதிக்கு முன்னேறின

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. அர்ஜென்டினாவை வென்று பிரான்ஸ், போர்ச்சுகலை வென்று உருகுவே, ஸ்பெயினை வென்று ரஷ்யா, டென்மார்க்கை வென்று குரேஷியா, மெக்சிகோவை வென்று பிரேசில், ஜப்பானை வென்று பெல்ஜியம் ஆகியவை காலிறுதிக்கு நுழைந்துள்ளன.

இந்த உலகக் கோப்பையில்

இந்த உலகக் கோப்பையில்

இந்த உலகக் கோப்பையில் எப் பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்வீடன் 3ல் 2ல் வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது. தென்கொரியாவை 1-0, மெக்சிகோவை 3-0 என வென்றது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியிடம் 2-1 என தோல்வியடைந்தது. அதே நேரத்தில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த சுவிட்சர்லாந்து 3ல் ஒரு வெற்றி, 2 டிராவுடன் நாக் அவுட் முன்னேறியது. முதல் ஆட்டத்தில் பிரேசிலுடன் 1-1 என டிரா செய்து அசத்தியது. செர்பியாவை 2-1 என வென்றது. கோஸ்டாரிகாவுடன் 2-2 என அசத்தலாக டிரா செய்தது.

ஸ்வீடன் அசத்தல் சாதனை

ஸ்வீடன் அசத்தல் சாதனை

இன்று நடைபெற்ற ஆட்டம், உலகக் கோப்பையில் ஸ்வீடனுக்கு 50வது ஆட்டமாகும். 50 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள 11வது அணியாக உள்ளது. இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் மெக்சிகோ மட்டுமே அதிகப் போட்டிகளில் விளையாடியுள்ளது. 1958ல் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஸ்வீடன், 1994ல் மட்டுமே நாக் அவுட் சுற்றை தாண்டியுள்ளது. கடைசியாக விளையாடிய நான்கு உலகக் கோப்பைகளிலும் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போரடித்த ஆட்டம்

போரடித்த ஆட்டம்

இன்று நடந்த ஆட்டத்தில், நாக் அவுட் சுற்றில் விளையாடுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல், ரசிகர்களுக்கு தூக்கம் வரவழைக்கும் அளவுக்கு மிகவும் சாதாரணமாக இரு அணிகளும் விளையாடின. கோல் ஏதும் அடிக்கப்படாமல் முதல் பாதி முடிந்தது. மிகவும் மந்தமாக நடந்த வந்த நிலையில் 66வது நிமிடத்தில் போர்ஸ்பர்க் கோலடிக்க, ஸ்வீடன் 1-0 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.

Story first published: Tuesday, July 3, 2018, 21:38 [IST]
Other articles published on Jul 3, 2018
English summary
Sweden to face switzerland in the knock out match of the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+