Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட், ஒருநாள், டி20.. மாற்றம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.. குல்தீப் யாதவ் ஓபன் டாக்!

சாட்டாகிராம்: டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு பந்துவீச்சில் மாற்றம் செய்வதில் எந்த பிரச்சினையுமில்லை என்று இந்திய சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முதல் சைனா மேன் பவுலர் என்ற அடைமொழியுடன் அறிமுகமான வீரர் குல்தீப் யாதவ். 2017ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான குல்தீப் யாதவ், இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

கிட்டத்தட்ட 22 மாதங்களுக்கு பின், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார் குல்தீப் யாதவ். ஆனால் நீண்ட ஆண்டுகளுக்கு பின் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார்.

இந்தியா வெற்றிபெறுமா?

இந்தியா வெற்றிபெறுமா?

இந்த நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 513 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்த மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அஸ்வின், அக்சர் மற்றும் குல்தீப் யாதவ் இணை நாளை இந்திய அணிக்கு வெற்றியை தேடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம் தேவையில்லை

மாற்றம் தேவையில்லை

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து குல்தீப் யாதவ் கூறுகையில், கையின் மணிக்கட்டை பயன்படுத்தி பந்தை சுழல் செய்வதால், பெரிதாக எனக்கு பிட்ச் பற்றிய கவலையில்லை. அதேபோல் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறும் மாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அதனால் ஃபீல்டிங் மாற்றம், ஃபார்மேஷன்கள், ஒரே பகுதியில் பந்துவீசுவது மட்டுமே சவாலான விஷயம்.

காயத்திற்கு பின் வந்த பிரச்சினை

காயத்திற்கு பின் வந்த பிரச்சினை

22 மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடவில்லை என்றாலும், எந்த விளையாடவில்லை என்ற உணர்வு ஏற்படவில்லை. அதேபோல் காயத்திற்கு பின், பெரிதாக பந்துவீசாததால், சில பிரச்சினைகள் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து ரெட் பால் கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன். எப்போதும் தேசிய அணிக்காக விளையாடிய போது, பிரஷரை உணர்ந்ததில்லை.

சுழலுக்கு சாதகம்

சுழலுக்கு சாதகம்

அதேபோல் சாட்டாகிராம் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. சில பந்துகள் தாழ்வாகவும், சில பந்துகள் நன்றாகவும் சுழல்கிறது. பேட்டிங்கின் போது நானும் அஸ்வினும் இணைந்து 400 ரன்கள் வரை அணியின் ஸ்கோரை கொண்டு செல்வோம் என்று நினைக்கவில்லை. பந்துவீச்சின் போது அக்சர் மற்றும் அஸ்வினுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாளை ஆட்டத்தில் பிட்ச்சில் நல்ல சுழல் இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

Story first published: Friday, December 16, 2022, 20:53 [IST]
Other articles published on Dec 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+