Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

72 ஆண்டுகால அவப்பெயரை துடைத்த சுவிட்சர்லாந்து.. கொலம்பியாவை வீழ்த்தி உலகக்கோப்பை காலிறுதிக்கு தகுதி

வான்கூவர்: கொலம்பியா அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 72 ஆண்டுகளாக உலகக்கோப்பை காலிறுதிக்கு கூட முன்னேறாத அணி என்ற அவப்பெயரை துடைத்து இருக்கிறது சுவிட்சர்லாந்து அணி.

வான்கூவரில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் கடுமையான தடுப்பாட்டத்தைக் கையாண்டதால், ஆட்ட நேரமான 90 நிமிடங்களிலும், கூடுதல் நேரமான 30 நிமிடங்களிலும் இரு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. கொலம்பியா அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், சுவிட்சர்லாந்து வீரர்கள் தங்களது அரண் போன்ற தடுப்பாட்டத்தால் அதனை முறியடித்தனர்.

Switzerland Beats Colombia on Penalties to Reach FIFA World Cup 2026 Quarterfinals

ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கொலம்பியாவின் குஸ்டாவோ புவேர்ட்டா அடித்த பந்தை சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் கிரிகோர் கோபெல் அபாரமாக தடுத்தார். சுவிட்சர்லாந்து தரப்பில் டேனியல் என்டோயே மற்றும் கொலம்பியாவின் ஜான் லுகுமி ஆகியோரின் கோல் முயற்சிகள் நூலிழையில் தவறின.

இதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில், சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் கிரிகோர் கோபெல் மீண்டும் ஒருமுறை ஹீரோவாக உருவெடுத்தார். கொலம்பியா அணியின் டேவின்சன் சான்செஸ் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேற, குச்சோ ஹெர்னாண்டஸ் அடித்த பெனால்டி பந்தை கோபெல் தடுத்து நிறுத்தினார்.

சுவிட்சர்லாந்து அணியின் மானுவல் அகாஞ்சி அடித்த பந்து கம்பத்திற்கு மேலே சென்ற போதிலும், ரூபன் வர்காஸ் கடைசி பெனால்டியை மிகச் சரியாக கோலாக்கி 4-3 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.

“வைபவ் சூர்யவன்ஷிக்காக நானே இந்திய அணியை விட்டுப்போகிறேன்”.. சஞ்சு சாம்சன் தாமாக விலகியதாக தகவல்

“வைபவ் சூர்யவன்ஷிக்காக நானே இந்திய அணியை விட்டுப்போகிறேன்”.. சஞ்சு சாம்சன் தாமாக விலகியதாக தகவல்

இதற்கு முன்பு சுவிட்சர்லாந்து அணி 1954-ல் தான் கடைசியாக உலகக்கோப்பை காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. மேலும் 2006, 2014, 2018 மற்றும் 2022 ஆகிய உலகக்கோப்பை தொடர்களில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றோடு வெளியேறியிருந்த அந்த அணி, தற்போது அந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், கடந்த 11 போட்டிகளில் அந்த அணி தோல்வியே சந்திக்கவில்லை. அடுத்ததாக நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை சுவிட்சர்லாந்து எதிர்கொள்ளவுள்ளது.

அர்ஜென்டினா வெற்றியில் சர்ச்சை.. எகிப்து பயிற்சியாளர் ஆவேசம்.. நடுவர்கள் மீது சரமாரி புகார்

அர்ஜென்டினா வெற்றியில் சர்ச்சை.. எகிப்து பயிற்சியாளர் ஆவேசம்.. நடுவர்கள் மீது சரமாரி புகார்
Story first published: Wednesday, July 8, 2026, 9:15 [IST]
Other articles published on Jul 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+