Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - தடைகளைத் தாண்டி சாதிக்குமா சுவிட்சர்லாந்து!

சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Switzerland have blend of youth and experience players

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
---
நாடு : சுவிட்சர்லாந்து

இ பிரிவில் பிரேசில், செர்பியா, கோஸ்டாரிகா உடன் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 17ல் பிரேசில்
ஜூன் 22ல் செர்பியா
ஜூன் 27ல் கோஸ்டாரிகா

பிபா தரவரிசை : 6

கடந்த உலகக் கோப்பையில் : காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் வெளியேறியது

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1934, 1938, 1954ல் காலிறுதி

முக்கிய வீரர்கள் : கிரானிட் ஜாகா, ஜர்தான் ஷாக்ரி, ரிகார்டோ ரோட்ரிகுஸ்

கோச் : விளாதிமிர் பெட்கோவிக்
---
11வது முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது, தொடர்ந்து நான்காவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது என்பது சாதாரணமான விஷயமல்ல.

இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் சரிசமமாக உள்ள சுவிட்சர்லாந்து அணி, இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சிதான்.

தகுதிச் சுற்று ஆட்டங்களில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்றது. கடைசியாக போர்ச்சுகல்லுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அதனால் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற முடியவில்லை.

அதையடுத்து நடந்த பிளே ஆப் சுற்று ஆட்டங்களின்போது, மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது, பெனால்டி கோல் அடித்ததில் சர்ச்சை என, பல தடைகளைத் தாண்டி சுவிட்சர்லாந்து அணி இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது தகுதிச் சுற்றில் 10ல் 9ல் வெற்றி மற்றும் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தையச் சுற்று வரை முன்னேறியது என்பதை நாம் மறக்க முடியாது.

இ பிரிவில் பிரேசில், கோஸ்டாரிகா மற்றும் செர்பியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்களின் கலவையாக உள்ளது சுவிட்சர்லாந்து அணிக்கு சாதகமாகும்.

இ பிரிவில் பிரேசில் முதலிடம் பிடிக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான அதிக வாய்ப்பு சுவிட்சர்லாந்து அணிக்கு உள்ளது.

பிரபலமான முன்கள வீரர்கள் இருந்தாலும், அதிக கோல் அடிக்கக் கூடியதாக சுவிட்சர்லாந்து உள்ளது. அதை கவனித்தாலே, 64 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு சுவிட்சர்லாந்துக்கு கிடைக்கும். ஆனால், அதற்கு முன் இ பிரிவின் முதல் ஆட்டத்தில் பிரேசில் அணியையும், காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனியையும் அந்த அணி சந்திக்க வேண்டியுள்ளது.

Story first published: Thursday, June 7, 2018, 8:40 [IST]
Other articles published on Jun 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+