Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலில் பிரேசில்.. அடுத்தது செர்பியா.. குட்டி அணி சுவிட்சர்லாந்தின் ஷாக் ட்ரீட்மென்ட் தொடர்கிறது!

காலினின்கிராட்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றன. இதில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 2-0 என முன்னாள் சாம்பியன் பிரேசில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் செர்பியாவை 2-1 என சுவிட்சர்லாந்தை வென்று ஷாக் கொடுத்தது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

Switzerland-and-Serbia

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகிய அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2 - 0 என கோஸ்டாரிகாவை வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் செர்பியாவை 2-1 என சுவிட்சர்லாந்தை வென்றது.
----
பிரிவு இ
சுவிட்சர்லாந்து - செர்பியா
2 - 1
----
இ பிரிவில் இதுவரை...

* செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது.
* பிரேசில் 1-1 என சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது.
* பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது.
* சுவிட்சர்லாந்து 2-1 என செர்பியாவை வென்றது

இ பிரிவின் புள்ளிப் பட்டியலில் பிரேசில், சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. கோஸ்டாரிகா இரண்டு தோல்விகளை சந்தித்து பிரிவுச் சுற்றிலேயே வெளியேறுகிறது.
-----
இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வென்றது செர்பியா.

இரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் முன்னாள் சாம்பியனான பிரேசில் விளையாடியது. இந்த ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்தின் ஜூபர் 50வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

அந்த ஆட்டத்தில் உலகின் காஸ்ட்லியான வீரரான பிரேசிலின் நெய்மர் கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றினார். இந்த நிலையில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது. நெய்மர் முதல் கோலை அடித்தார்.

அதற்கடுத்த ஆட்டத்தில் செர்பியாவுடன் சுவிட்சர்லாந்து விளையாடியது. துவக்கத்தில் இருந்தே சுவிட்சர்லாந்தின் ஆட்டமாக இந்த ஆட்டம் அமைந்தது. 62 சதவீத நேரம் பந்து அந்த அணியிடம் இருந்தது. 20 முறை கோலடிக்கும் வாய்ப்பு அதற்கு கிடைத்தது. அதில் 5 முறை கோல் பகுதிக்குள் பந்தை அது செலுத்தியது.

ஆட்டத்தின் 5வது நிமிடம் மிட்ரோவிக் கோலடிக்க செர்பியா 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியிலும் செர்பியா முன்னிலையுடன் முடித்தது.

சுவிட்சர்லாந்து காலி என்று நினைத்த நிலையில் 52வது நிமிடத்தில் ஷாகா கோலடித்து சமநிலையை உருவாக்கினார். ஆட்டம் டிராவில் முடியும் என்று நினைத்த நேரத்தில் கடைசி நிமிடத்தில் ஷாகிரி ஒரு கோல் அடிக்க 2-1 என சுவிட்சர்லாந்து அபாரமாக வென்றது.

இதன் மூலம் சுவிட்சர்லாந்து 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்திடம் ஷாக் ட்ரீட்மென்ட் வாங்கிய நெய்மரின் பிரேசிலும் 4 புள்ளிகளுடன் உள்ளது. செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த கோஸ்டாரிகா வெளியேறியது.

அடுத்து 27ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் செர்பியா, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா மோதுகின்றன. அதன் முடிவுகளின்படியே, நாக் அவுட் சுற்றுக்கு யார் முன்னேறுவர் என்பது உறுதியாகும்.

Story first published: Saturday, June 23, 2018, 15:16 [IST]
Other articles published on Jun 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+