Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா.. இன்று துவங்குகிறது.. 300 கோடி மக்கள் காத்திருக்கின்றனர்!

Recommended Video

இன்று முதல் தொடங்குகிறது உலக கோப்பை கால்பந்து திருவிழா- வீடியோ

மாஸ்கோ: உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஒரு மாதம் நடக்கும் இந்தத் திருவிழாவில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பையை உலகெங்கும் 300 கோடி மக்கள் பார்த்து ரசிக்க உள்ளனர்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் இன்று துவங்குகிறது. 32 நாடுகள், 32 நாட்கள், 64 ஆட்டங்கள் என, உலகக் கோப்பை களைக் கட்ட உள்ளது.

ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், அந்தப் பிரிவில் உள்ள மற்ற அனைத்து அணிகளுடன் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் என, 16 அணிகள் அடுத்தக்கட்ட நாக் அவுட் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூன் 28 வரையில் நடக்கிறது. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் 30ல் துவங்குகிறது. கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. பைனல் ஜூலை 15ம் தேதி நடைபெறுகிறது.

8 பிரிவுகளில் 32 அணிகள்

8 பிரிவுகளில் 32 அணிகள்

ஏ பிரிவில் ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் - போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ, ஈரான், சி பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு, டென்மார்க், டி பிரிவில் அர்ஜென்டீனா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா, இ பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, செர்பியா, எப் பிரிவில் ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா, ஜி பிரிவில் பெல்ஜியம், பனாமா, துனீஷியா, இங்கிலாந்து, எச் பிரிவில் போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

கோப்பையை வென்ற 8 அணிகள்

கோப்பையை வென்ற 8 அணிகள்

இதுவரை நடந்துள்ள 20 உலகக் கோப்பைகளில் 8 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. உலகக் கால்பந்து கூட்டமைப்பான பிபாவில் தற்போது 211 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதுவரை 77 நாடுகள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பங்கேற்றுள்ளன. அதில் 12 நாடுகள் மட்டுமே பைனல்நுழைந்துள்ளன. ஆனால், 8 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பையை மாறி மாறி வென்றுள்ளன.

பிரேசில் அபாரம்

பிரேசில் அபாரம்

இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ள ஒரே நாடு பிரேசில். அந்த அணி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்று, அதிக முறை கோப்பையை வென்ற சாதனையை தக்க வைத்துள்ளது. 1958, 1962, 1970, 1994, 2002ல் பிரேசில் கோப்பையை வென்றது. நடப்பு சாம்பியன் ஜெர்மனி 1954, 1974, 1990, 2014 என்று நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இத்தாலி மிஸ்ஸிங்

இத்தாலி மிஸ்ஸிங்

இத்தாலியும் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால், இந்த உலகக் கோப்பைக்கு அந்த அணி தகுதி பெறவில்லை. இதற்கு முன் கோப்பையை வென்ற அணிகளில் இத்தாலியைத் தவிர பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டீனா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 7 நாடுகளும் இந்த உலகக் கோப்பையில் விளையாடுகின்றன.

300 கோடி பேர்

300 கோடி பேர்

இந்த உலகக் கோப்பை போட்டிகளை 196 தொலைக்காட்சி சேனல்கள் 212 நாடுகளில் ஒளிபரப்பு செய்கின்றன. உலகெங்கும் 300 கோடி மக்கள் இந்த உலகக் கோப்பையை டிவியில் பார்த்து ரசிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் 11 நகரங்களில் 12 மைதானங்களில் போட்டிகள் நடக்க உள்ளன. இன்று மாலை மிக பிரம்மாண்ட துவக்க விழா நடைபெறுகிறது. அதன்பிறகு, இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் விளையாட உள்ளன.

Story first published: Thursday, June 14, 2018, 0:30 [IST]
Other articles published on Jun 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+