Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கோல்ல்ல்ல்ல்ல்ல்ல்".... வருகிறது உலகப் பெரும் விளையாட்டுத் திருவிழா.. ஒரு முன்னோட்டம்!

ரியோடிஜெனீரோ: உலகெங்கும் உள்ள இளசுகளின் கால்களும், கைகளும், வாய்களும் தாளம் போட ஆரம்பித்து விட்டன.. எப்படா ஆரம்பிக்கும் ஆட்டம் என்று எதிர்பார்த்து.. ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை உலகையே உறைய வைக்கப் போகிறது இவர்கள் எதிர்பார்க்கும் அந்த ஆட்டம்.. அதுதான் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி.

இந்தியாவில் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் ஜூரம் என்றால் உலகில் முக்கால்வாசிப் பேருக்கு கால்பந்துக் காய்ச்சல்தான் அதிகம். இப்படிப்பட்டர்களுக்கு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி வந்து விட்டால் போதும் போட்டது போட்டபடி.. கமான் கமான் என்று டிவி முன்பும் முடிந்தால் போட்டி நடக்கும் ஸ்டேடியங்களில் குவிந்தும் குதூகலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

உலகக் கோப்பைப் போட்டி நடக்கும் இந்த ஒரு மாத காலமும் உலகம் முழுவதும் இதுதான் பேச்சாக இருக்கும். யார் எத்தனை கோல் அடிப்பார்கள்.. எந்த அணிக்குக் கோப்பை.. என்ற ஹேஸ்யங்களும், ஜோசியங்களும் களை கட்டியிருக்கும்.

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி எவ்வளவு ஹாட்டானதோ அதை விட ஹாட்டானது அதைப் பார்க்க வரும் ரசிகர் கூட்டம்.. ஆண்கள் மட்டுமல்ல, பெண் ரசிகைகளும்தான். வாருங்கள்.. உலகக் கோப்பைப் போட்டித் தொடர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை கண்கவர் கால்பந்து ரசிகைகளின் புகைப்படங்களி்ன் துணையுடன் ஒரு ரவுண்டு பார்த்து விட்டு வரலாம்...

பிரமிக்க வைக்கும் பிரேசிலில்

பிரமிக்க வைக்கும் பிரேசிலில்

கால்பந்துக்காக உயிரையே கொடுக்கத் துணியும் ரசிகர்களைக் கொண்ட பிரேசில் நாட்டில்தான் 2014ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதை 2007ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிஃபா எனப்படும் உலக கால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

32 அணிகள்

32 அணிகள்

இந்தத் தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் தானாகவே போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றது. மற்றவர்கள் தகுதிப் போட்டிகள் மூலம் தகுதி பெற்றார்கள்.

யார் யார்...

யார் யார்...

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், தென் கொரியா, அல்ஜீரியா, காமரூன், கானா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கோஸ்டா ரிகா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈகுவடார், உருகுவே, பெல்ஜியம், போஸ்னி ஹெர்ஸகோவினா, குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள்தான் இந்த வருடத்து உலகக் கோப்பைப் போட்டியில் மோதப் போகின்றன.

மாபெரும் பரிசுகள்

மாபெரும் பரிசுகள்

உலக்க கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மாபெரும் பரிசுத் தொகை காத்திருக்கிறது. மொத்தப் பரிசுத் தொகை 576 மில்லியன் டாலராகும். இது கடந்த 2010 தொடரை விட 37 சதவீதம் கூடுதலாகம்.

குரூப் போட்டிகளுடன் விடைபெறும் அணிக்கு

குரூப் போட்டிகளுடன் விடைபெறும் அணிக்கு

குரூப் போட்டிகளுடன் விடைபெறும் 16 அணிகளுக்கு தலா 80 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக தரப்படும்.

ரவுண்ட் 16 வரை வருவோருக்கு

ரவுண்ட் 16 வரை வருவோருக்கு

ரவுண்ட் 16 வரை வந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 90 லட்சம் டாலர் பரிசாக தரப்படும்.

காலிறுதி வரை வருவோருக்கு

காலிறுதி வரை வருவோருக்கு

காலிறுதிப் போட்டிகள் வரை வந்து வெளியேறும் 4 அணிகளுக்கு தலா 1.4 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.

4வது இடம் பிடிக்கும் அணிக்கு

4வது இடம் பிடிக்கும் அணிக்கு

4வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2 கோடி டாலர் பரிசாக கிடைக்கும். 3வது இடம் பிடிக்கும் அணிக்கு 2.2 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.

கோப்பையை வெல்லும் அணிக்கு 3.5 கோடி டாலர் பரிசு

கோப்பையை வெல்லும் அணிக்கு 3.5 கோடி டாலர் பரிசு

கோப்பையை வெல்லும் அணிக்கு 3.5 கோடி டாலர் பரிசுத் தொகை கிடைக்கும். 2வது இடம் பெறும் அணிக்கு 2.5 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.

எங்கெங்கு போட்டிகள்

எங்கெங்கு போட்டிகள்

ரியோடிடி ஜெனீரோ, பிரேசிலியா, சாவோ பாலோ, போர்டாலெஸா, பெலோ ஹாரிசான்டே, சால்வடார், போர்டோ அல்கெரே, ரெசிபி, குயாபா, மனாஸ், நடால், கரிடிபா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.

8 குரூப்கள்

8 குரூப்கள்

ஏ, பி,சி, டி, இ, எப், ஜி, எச் என மொத்தம் 8 குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவில் பிரேசில்

ஏ பிரிவில் பிரேசில்

ஏ பிரிவில் போட்டியை நடத்தும் பிரேசில், குரோஷியா, மெக்ஸிகோ, காமரூன் ஆகியவை உள்ளன.

பி பிரிவில் ஸ்பெயின்

பி பிரிவில் ஸ்பெயின்

பி பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா ஆகியவை வருகின்றன.

சி பிரிவில் கிரீஸ்

சி பிரிவில் கிரீஸ்

சி பிரிவில் கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான் ஆகியவை உள்ளன.

டி பிரிவில் இத்தாலி

டி பிரிவில் இத்தாலி

டி பிரிவில் உருகுவே, கோஸ்டா ரிகா, இங்கிலாந்து, உருகுவே ஆகிய அணிகள் உள்ளன.

இ பிரிவில் பிரான்ஸ்

இ பிரிவில் பிரான்ஸ்

இ பிரிவில் சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ் ஆகியவை வருகின்றன.

எப் பிரிவில் அர்ஜென்டினா

எப் பிரிவில் அர்ஜென்டினா

எப் பிரிவில் அர்ஜென்டினா, போஸ்னியா ஹெர்ஸகோவினா, ஈரான், நைஜீரியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ஜி பிரிவில் ஜெர்மனி

ஜி பிரிவில் ஜெர்மனி

ஜி பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா ஆகியவை உள்ளன.

எச் பிரிவில் ரஷ்யா

எச் பிரிவில் ரஷ்யா

எச் பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா ஆகிய அணிகள் உள்ளன.

ஜூலை 4-5ல் காலிறுதிப் போட்டிகள்

ஜூலை 4-5ல் காலிறுதிப் போட்டிகள்

காலிறுதிப் போட்டிகள் ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

ஜூலை 8,9ல் அரை இறுதிப் போட்டிகள்

ஜூலை 8,9ல் அரை இறுதிப் போட்டிகள்

8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு அரை இறுதிப் போட்டிகளும் நடைபெறும்.

3வது இடத்துக்கு 12ம் தேதி மோதல்

3வது இடத்துக்கு 12ம் தேதி மோதல்

3வது இடத்துக்கான போட்டி ஜூலை 12ம் தேதி நடைபெறும்.

ஜூலை 13ம் தேதி இறுதிப் போட்டி

ஜூலை 13ம் தேதி இறுதிப் போட்டி

ஜூலை 13ம் தேதி கோப்பையைப் பெறப் போகும் அணியை இறுதி செய்யும் இறுதிப் போட்டி நடைபெறும்.

மீண்டும் வெல்லுமா ஸ்பெயின்

மீண்டும் வெல்லுமா ஸ்பெயின்

கடந்த 201ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது. 2வது இடத்தை நெதர்லாந்தும், 3வது இடத்தை ஜெர்மனியும், 4வது இடத்தை உருகுவேயும் கைப்பற்றின. இந்த முறை கோப்பையை வெல்லப் போவது யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, May 21, 2014, 16:52 [IST]
Other articles published on May 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+