Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிய கிண்டல் செஞ்சவங்க எங்கப்பா... இத கொஞ்சம் பாருங்க!

டெல்லி: ஐபிஎல்லில் கேப்டன் கூல் தோனியோட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வயதானவர்கள் அணி என்று கூறினார்கள். ஆனால், விளையாட்டுக்கு வயது ஒரு காரணமே இல்லை என்பதை அந்த அணி நிரூபித்து கோப்பையை வென்றது. அதுபோல பிபா உலகக் கோப்பையில் மிகவும் வயதானவர்கள் அணிகளும் உள்ளன.

பிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் 32 நாடுகளும் தங்களுடைய அணிக்காக வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் எகிப்து கோல் கீப்பர் ஈஸாம் எல் ஹதாரிதான், உலகக் கோப்பை போட்டிகளிலேயே மிகவும் வயதானவர்

45 வயதாகும் அவர், இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்க உள்ளார். 1996ல் கால்பந்தில் அறிமுகமான ஹதாரி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளார்.

சாதனை முறியடிப்பு

சாதனை முறியடிப்பு

கொலம்பியாவின் பர்யாத் மோன்ட்ராகன் 43 வயதில் உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். அந்த சாதனையை ஹதாரி முறியடிக்க உள்ளார்.

இளம்வயது கோச்கள்

இளம்வயது கோச்கள்

இந்த உலகக் கோப்பையில் சில அணிகளின் கோச்களாக உள்ளவர்களைவிட ஹதாரி வயதில் மூத்தவர். செனகலின் அலியே சிஸி, செர்பியாவின் மிலாதன் கிர்ஸ்டாஜிக், பெல்ஜியத்தின் ராபர்டோ மார்ட்டினஸ் போன்ற கோச்கள் இவரைவிட வயதில் சிறியவர்கள்.

அடுத்த சீனியர்

இந்த உலகக் கோப்பையில் விளையாட உள்ள மெக்சிகோவின் ரபேல் மார்கஸ்க்கு 39 வயதாகிறது. ஹதாரிக்குப் பிறகு அதிக வயதானவர் இவர்தான்.

வயதான அணிகள்

வயதான அணிகள்

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் பனாமா, கோஸ்டாரிகா ஆகிய அணி வீரர்களின் சராசரி வயது 29.6 ஆண்டுகள், மெக்சிகோவின் சராசரி வயது 29.4 ஆண்டுகள்.

Story first published: Wednesday, June 6, 2018, 20:06 [IST]
Other articles published on Jun 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+