Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெக்சிகோவுடன் மோதல்.. பிரேசில்தான் வெல்லுமாம்.. 'ஆமையார்' ஆரூடம்!!

ரியோடிஜெனிரோ: 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்சிகோவுடனான ஆட்டத்தில் பிரேசில் அணியே வெல்லும் என்று 'ஆமை' ஆருடம் கூறியிருக்கிறதாம். இதனால் பிரேசில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

கடந்த உலக கோப்பையில் ஜெர்மனி நாட்டின் "ஆக்டோபஸ்" பால் அனைத்து போட்டிகளிலும் வெற்றி தோல்விகளை சரியாக கணித்து தெரிவித்தது. இப்போது அது இறந்துவிட்டது.

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கணிக்க ஜெர்மனியின் யானையான "நெல்லி" கணிப்பு பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

களத்தில் கடல் ஆமை

களத்தில் கடல் ஆமை

அதற்கு போட்டியாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் பிரேசில் 'கடல் ஆமையை' களத்தில் இறக்கிவிட்டது.

ஆமை கணிப்பு எப்படி?

ஆமை கணிப்பு எப்படி?

இந்த பெரிய தலை கொண்ட கடல் ஆமையான 'கபேகா' முன்பாக போட்டி நடைபெறும் நாடுகளின் தேசியக் கொடியுடன் மீன்களை தொங்கவிடுகின்றனர். எந்த நாட்டு கொடியின் மீனை ஆமை சாப்பிடுகிறதோ அந்த நாடு வெல்லும்.

முதல் போட்டியில் சொன்ன மாதிரியே..

முதல் போட்டியில் சொன்ன மாதிரியே..

குரோஷியாவுடனான முதல் போட்டியில் இப்படித்தான் ஆமையார் பிரேசில் வெல்லும் கூறியிருந்தார். அதன் படியே நெய்மாரின் அபாரத்தால் குரோஷியாவை பிரேசில் வீழ்த்தியது.

ஆமை ஆரூடம்

ஆமை ஆரூடம்

இதேபோல் மெக்சிகோ- பிரேசில் இடையேயான இன்றைய போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்றும் ஆமையாரிடம் நேற்று கேட்கப்பட்டது.

பிரேசில்தான் ஜெயிக்குமாம்

பிரேசில்தான் ஜெயிக்குமாம்

அந்த ஆமையாரும் இன்றைய மெக்சிகோவுடனான போட்டியிலும் பிரேசிலே வெல்லும் என்று சொல்லி இருக்கிறதாம்.

லண்டனுக்கு பதிலடி?

லண்டனுக்கு பதிலடி?

2012 லண்டன் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பிரேசிலின் தங்கப் பதக்க கனவை தகர்த்தது மெக்சிகோ. அதற்கு இன்றைய போட்டியில் பழிவாங்கும் வகையில் பிரேசில் விளையாட வாய்ப்பிருப்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பானதாக இருக்கலாம்.

Story first published: Tuesday, June 17, 2014, 17:18 [IST]
Other articles published on Jun 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+