Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முன்னணி வீரர்கள் களம் காண்கிறார்கள்.. இந்த வருட ஐ.எஸ்.எல் இன்னும் சுவாரசியம்: கங்குலி கணிப்பு

கொல்கத்தா: ஐ.எஸ்.எல் கால்பந்தாட்டம் இந்த ஆண்டு மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.எல் சீசன்-3 அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நாடுகளின் முன்னணி வீரர்களை இந்திய உள்ளூர் அணிகள் போட்டிபோட்டு அதிக தொகை கொடுத்து வாங்கி வருகின்றன.

The third edition of the ISL will be the most competitive explained Sourav Ganguly

'அட்லட்டிகோ டி கொல்கத்தா' அணி சக உரிமையாளரான சவுரவ் கங்குலி இதுபற்றி கூறுகையில், கடந்த வருடம் நடைபெற்ற தொடரின் அரையிறுதியில் சென்னையின் எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியை கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் 75 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தனர்.

மக்கள் மத்தியில் கால்பந்து பிரபலமாகி வருகிறது என்பதற்கான வெளிப்பாடுதான் இந்த வரவேற்பு. கொல்கத்தா அணி முதல் சீசனைவிட இரண்டாவது சீசனில் மேம்பட்டது. தற்போது இன்னும் சிறந்த அணியாக உருவாகியுள்ளது.

அனைத்து அணிகளுமே பிரபலமான வீரர்களை இணைத்துக்கொண்டுள்ளதால் இந்த ஆண்டு ஐ.எஸ்.எல் தொடர் மிகுந்த சுவாரசியமாக இருக்கும் என்றார்.

Story first published: Monday, September 19, 2016, 14:56 [IST]
Other articles published on Sep 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+