Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா... இந்த இந்தியன் தாத்தா செய்யும் ப்ரீஸ்டைலிங்கைப் பாருங்களேன்... பீலே தோத்தாரு!

சென்னை: பீலே, ரொனால்டோ, ரொமாரியோ, லியோனல் மெஸ்ஸி என சூப்பர் ஸ்டார்களை மட்டுமே பார்த்து ரசித்து வந்த நமக்கு இந்த இந்தியன் தாத்தா மெகா ஸ்டார் ரேஞ்சுக்குத் தெரிகிறார்.

காரணம், இவரது காலில் பட்டு பந்து விளையாடும் வித்தை.. இந்த தாத்தாவுக்கு இப்படி ஒரு திறமையா என்று அதிசயிக்க வைக்கிறார். இந்த தாத்தா ப்ரீஸ்டைலிங் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ தற்போது பேஸ்புக்கில் படு வேகமாகப் பரவி கலகலக்க வைத்துள்ளது.

அப்படி அனாயசமாக தனது காலில் பந்தைப் போட்டு ப்ரீஸ்டைலிங் செய்கிறார் தேர்ந்த கால்பந்து வீரர் போல.

கால்பந்து ஜூரம்

கால்பந்து ஜூரம்

உலகம் பூராவும் இப்போது 'விருமாண்டி சந்தானங்களுக்கு' அதாவது வைரஸ்களுக்கு வேலை இல்லை. மாறாக அந்த இடத்தை கால்பந்து ஜூரம் பற்றிக் கொண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கால்பந்துப் போட்டி குறித்த பேச்சுதான்.

இந்தியர்களின் ஏக்கம்

இந்தியர்களின் ஏக்கம்

இதில் இந்தியர்களுக்கு மட்டும் ஏக்கமும் கூடவே இருக்கிறது. எல்லோரும் விளையாடுகிறார்கள். நம்மை விட சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் கலக்குகிறது. இத்தனை கோடி பேர் இருந்தும், இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லையே என்ற ஏக்கம்தான் அது.

கலக்கல் தாத்தா

கலக்கல் தாத்தா

இந்த நிலையில்தான் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பார்க்க நேர்ந்தது. சாலையோரமாக இந்த தாத்தா செய்யும் வேலையைப் பார்த்தால் யாருக்குமே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

முண்டாசு தாத்தா

முண்டாசு தாத்தா

ப்ரீஸ்டைல் என்பது கால்பந்து விளையாட்டு தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அதை இந்த தாத்தா படு அனாயசமாக செய்து காட்டுகிறார் இந்த வீடியோவில்.

பீலே தோத்தாரு போங்கோ

பீலே தோத்தாரு போங்கோ

உலகப் புகழ் பெற்ற பீலே, மாரடோனா, ரொனால்டோ, ரொமாரியோ, கரீன்ச்சா, மெஸ்ஸி உலகப் புகழ் ஜாம்பவான்களைப் போல கை தேர்ந்த கால்பந்து வீரர் போல இவர் செய்து காட்டுவது சிலிர்க்க வைக்கிறது.

யாருக்க சொன்னா இந்தியாவில் திறமை இல்லை என்று.. இந்த தாத்தாவைப் போல நிறைய இளைஞர்கள் காலில் பந்துடனும், கண்களில் கனவுகளுடனும் காத்திருக்கத்தான் செய்கிறார்கள். தூக்கி விடத்தான் யாரும் இல்லை.. !

Story first published: Monday, July 7, 2014, 13:14 [IST]
Other articles published on Jul 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+