Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெக்சிகோ தெருக்களில் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டம்.. வரலாறு காணாத உலகக்கோப்பை வெற்றி

மெக்சிகோ சிட்டி: பிபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரில், ஈக்வடார் அணிக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாட மெக்சிகோ நகரத் தெருக்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விடிய விடிய உற்சாகமாகக் கொண்டாடினர்.

உலகக் கோப்பையின் நாக்கவுட் சுற்றில் மெக்சிகோ அணி பெற்ற இந்த வெற்றி, கடந்த 40 ஆண்டுகளில் அந்த நாடு கண்டிராத வரலாற்றுச் சாதனையாகும். கடைசியாக 1986-ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பல்கேரியாவை வீழ்த்தி மெக்சிகோ நாக்கவுட் சுற்றில் வென்றிருந்தது. அதன் பிறகு, 1994 முதல் 2018 வரை தொடர்ந்து 7 முறை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றோடு வெளியேறியும், 2022-இல் லீக் சுற்றோடு வெளியேறியும் ரசிகர்களை ஏமாற்றியது.

Thousands of Fans Flood Mexico City Streets to Celebrate Historic World Cup Knockout Victory After 40 Years

நீண்ட கால ஏமாற்றத்திற்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றியால் மெக்சிகோ நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் தேசியக் கொடிகளை அசைத்தும், வானவேடிக்கைகள் வெடித்தும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்த வீடியோவை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் "வாட் இஃப்" (என்ன நடந்தால் என்ன?) என்று முழக்கமிட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். பின்னர் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இணைந்து மெக்சிகோவின் பாரம்பரிய பாடலான 'எல் ரே' பாடலைப் பாடி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போட்டியில் ஜுலியன் குயினோனஸ் 22-வது நிமிடத்திலும், ரவுல் ஜிமினெஸ் 31-வது நிமிடத்திலும் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மேலும், 17 வயதான கில்பர்டோ மோரா, பீலேவுக்குப் பிறகு உலகக் கோப்பை நாக்கவுட்போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய மிகக் குறைந்த வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தத் தொடரில் இதுவரை ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்காமல் 4 போட்டிகளிலும் மெக்சிகோ கிளீன் ஷீட் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகளில் முதல் முறையாக நாக் அவுட் வெற்றி பெற்ற மெக்சிகோ.. ஈக்வடாரை வீழ்த்தியது

40 ஆண்டுகளில் முதல் முறையாக நாக் அவுட் வெற்றி பெற்ற மெக்சிகோ.. ஈக்வடாரை வீழ்த்தியது

இதுகுறித்து மெக்சிகோ பயிற்சியாளர் ஜாவியர் அகுய்ரே கூறுகையில், "இந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனென்றால் முந்தைய உலகக் கோப்பை நாக்கவுட் சுற்றுகளில் என்னால் முன்னேற முடியவில்லை. தற்போது நாங்கள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளோம். ரசிகர்களுக்கும் எங்களுக்கும் உள்ள பிணைப்பு ஒரு குடும்பத்தைப் போன்றது" என்றார்.

Story first published: Wednesday, July 1, 2026, 14:44 [IST]
Other articles published on Jul 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+