Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை பெண்கள் கால்பந்து தொடர்… முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கும் ரசிகர்கள்

பாரீஸ்:பிரான்சில் ஜூன் மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை காண விரும்பும் ரசிகர்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

உலகில் அதிக வரவேற்பை பெரும் விளையாட்டுத் திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டிதான். ஆண்கள் போட்டிக்கு இணையாக உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டிக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது.

1991ம் ஆண்டு தொடங்கி உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதுவரை 7 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

ஜூன் 7ம் தேதி தொடக்கம்

ஜூன் 7ம் தேதி தொடக்கம்

இந்த ஆண்டு 8வது உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி பிரான்சில் ஜூன் 7ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை நடைபெறும். பாரிஸ் உட்பட 9 நகரங்களில் போட்டிகள் நடக்கும்.

54 போட்டிகள்

54 போட்டிகள்

மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் லீக், அரையிறுதி, இறுதி என மொத்தம் 54 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை காண விரும்புவோர்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி இருக்கிறது. தனி நபர்களுக்கான டிக்கெட் கட்டணம் 9 யுரோவில் இருந்து தொடங்குகிறது.

13 யூரோ கட்டணம்

13 யூரோ கட்டணம்

தொடக்க விழாவுடன் நடைபெறும் பிரான்ஸ் - தென் கொரியா இடையிலான முதல் ஆட்டத்தை காண டிக்கெட் கட்டணம் 13 யுரோவில் இருந்து ஆரம்பிக்கிறது. அதேபோல் அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டிக்கான குறைந்த வகுப்பு கட்டணம் 23 யுரோவில் இருந்தும், மேல் வகுப்பு கட்டணம் 84யுரோவில் இருந்தும் தொடங்குகிறது.

சிறப்பு டிக்கெட் விற்பனை

சிறப்பு டிக்கெட் விற்பனை

விசா கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு டிக்கெட் விற்பனை 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. விசா நிறுவனம் உலக கோப்பை போட்டியின் முக்கிய விளம்பரதாரர். பேக்கேஜ் டிக்கெட் விற்பனையும் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

11 லட்சம் டிக்கெட்டுகள்

11 லட்சம் டிக்கெட்டுகள்

இதுவரை 5.35லட்சம் டிக்கெட்கள் விற்றுள்ளன. 11 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு விளையாட்டரங்கமும் 25000 முதல் 90ஆயிரம் வரை இருக்கைககள் கொண்டவை.

பிபாவில் டிக்கெட்

பிபாவில் டிக்கெட்

தனிநபர்களுக்கான டிக்கெட்கள் விற்பனை, டிக்கெட்கள் விற்கும் இணைய தளங்கள் மூலமாக கிடைக்கும். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா இணையதளம் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுகின்றன.

Story first published: Friday, March 8, 2019, 11:23 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+