Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஆண்டுகளில் முதல் முறை.. தாய்-காக கால்பந்து வீராங்கனை சந்தியா போட்ட ட்வீட்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனை சந்தியா ரங்கநாதன், தனது தாய்-காக போட்டுள்ள ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக தற்போது மகளிர் கால்பந்து போட்டியை காண்பதற்கும் ரசிகர்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சர்வதேச கால்பந்து போட்டிகள் சமீபத்தில் நடந்தன. நேபாள அணியுடன் நட்பு ரீதியிலான 2 சர்வதேச போட்டிகள் சென்னையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

சென்னையில் சர்வதேச போட்டிகள்

சென்னையில் சர்வதேச போட்டிகள்

கடந்த பிப்ரவரி 15 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்ற இந்த இரண்டு போட்டிகளும் சமனில் முடிவடைந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் போட்டியில் 2 - 2 என்றும், 2வது போட்டி ஒரு கோல் கூட அடிக்காமலும் முடிந்தன. இந்த போட்டிகள் தமிழகத்தில் நடந்தது என்ற உற்சாகத்தை விட 4 தமிழக வீராங்கனைகள் இதில் விளையாடினர் என்பது தான் சுவாரஸ்ய தகவல் ஆகும்.

நெகிழ்ச்சியான ட்வீட்

நெகிழ்ச்சியான ட்வீட்

இந்துமதி கதிரேசன் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் கார்த்திகா அங்கமுத்து, செளமியா நாராயணசாமி, சந்தியா ரங்கநாதன் 4 பேர் வாய்ப்பு பெற்றனர். இதில் சந்தியா ரங்கநாதன் போட்டுள்ள பதிவு தான் கவனம் ஈர்த்துள்ளது. தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " தேசத்திற்காக நான் விளையாடுவதை பார்க்க இறுதியில் என் அம்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது" எனக்குறிப்பிட்டுள்ளார்.

என் ஹீரோ

என் ஹீரோ

மேலும், நான் இன்று இந்த அளவிற்கு உயர்ந்து நிற்பதற்கு காரணம் எனது தாயார் தான். தந்தை இல்லாமல் 2 பெண்களை தனி ஒரு ஆளாக வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. எனினும் எந்தவித சிரமும் எங்களுக்கு தெரியாத வகையில் பார்த்துக்கொண்டார். எனது தூணே அவர் தான் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

6 வயதில் ஆர்வம்

6 வயதில் ஆர்வம்

6 வயதில் இருந்து கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட சந்தியா வறுமையின் காரணமாக அரசினர் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அங்கிருந்தபடியே கால்பந்து பயிற்சிகளை பெற்றுவந்துள்ளார். சீனியர்களின் உதவியால் ஒவ்வொரு படியாக முன்னேறி வந்த அவர் கடந்த 2018ம் ஆண்டு தேசிய சீனியர் அணிக்காக தகுதிப்பெற்றார். கடந்த 4 ஆண்டுகளில் தற்போது தான் அவர் விளையாடுவதை தாயாரால் நேரில் காண முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 20, 2023, 20:37 [IST]
Other articles published on Feb 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+