Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - முதல் சுற்றை தாண்டுமா துனீஷியா!

Tough fight for Tunisia in the fifa world cup

சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பலவேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.

நாடு: துனீஷியா
ஜி பிரிவில் இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் பனாமாவுடன் இடம்பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள்:
ஜூன் 18ல் இங்கிலாந்து
ஜூன் 23ல் பெல்ஜியம்
ஜூன் 28ல் பனாமா

பிபா தரவரிசை: 14

இதற்கு முன் உலகக் கோப்பையில்: 1978, 1998, 2002, 2006ல் விளையாடியது. முதல் பிரிவு சுற்று ஆட்டங்களிலேயே வெளியேறியது.

முக்கிய வீரர்கள்: ஆனைஸ் பாத்ரி, வாபி காஸ்ரி, அஹ்மத் அகாய்ச்சி.

கோச்: நாபில் மாலோல்
---
உலகக் கோப்பையில் விளையாடும் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனீஷியா, தகுதிச் சுற்று ஆட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தது.

இதுவரை உலகக் கோப்பையில் முதல் பிரிவு சுற்றைத் தாண்டியதில்லை என்ற மோசமான நிலையை மாற்றி அமைக்கும் தீர்மானத்துடன் உள்ளது. அதே நேரத்தில் பல முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளதால், வலுவிழந்து உள்ள துனீஷியாவுக்கு இது சாதாரண விஷயமில்லை.

மிகவும் பிரபலமான வீரர்கள் யாரும் அணியில் இல்லை. ஆனால், அதுவே அவர்களுக்கு ஒரு பலமாகும். ஆனைஸ் பாத்ரி அணியின் முக்கிய வீரராக உள்ளார். முக்கிய வீரரான யூசெப் மசாகினி காயம் காரணமாக விளையாடவில்லை என்பது அணிக்கு மிகப் பெரிய அடியாகும். அவர் இல்லாததால், நாயிம் ஸ்லிட்டி மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

துனீஷியாவுக்கு 74 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் உள்ள கோச் மாலோலுக்கு, துனீஷியா முதல் சுற்றைத் தாண்டினாலே மிகப் பெரிய வெற்றியாகும்.

லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் துனீஷியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். அந்த அணியுடன் டிரா செய்தாலே மிகப் பெரிய சாதனையாக இருக்கும்.

Story first published: Monday, June 4, 2018, 10:38 [IST]
Other articles published on Jun 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+