Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிபா உலகக் கோப்பை.... துனீஷியா அணி அறிவிப்பு!

துனிஸ்: பிபா உலகக் கோப்பையில் விளையாடும் ஆப்பிரிக்க நாடான துனீஷியா, 23 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

பிபா உலகக் கோப்பை போட்டிகள், ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடைபெற உள்ளது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டிகள் துவங்க சில நாட்களே உள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடான துனீஷியா 23 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

வாபி காஸ்ரி, ஆனைஸ் பாத்ரி போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக முன்கள வீரரான யூசப் மசாக்னி இடம்பெறவில்லை. அதே நேரத்தில் பைலெல் மோஷினி உள்ளிட்டோர் அணியில் இடம்பெறவில்லை.

Tunisia announced team for fifa world cup

லீசெஸ்டர் சிட்டி கிளப் அணியின் தடுப்பாட்டக்காரர் யோகான் பெனலோனே மட்டுமே பிரீமியர் லீக் அணிக்காக விளையாடிய வீரராக உள்ளார். 2006க்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடும் துனீஷியா, ஜி பிரிவில் இங்கிலாந்து, பெல்ஜியம், பனாமா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

துனீஷியா அணி:

கோல் கீப்பர் - பரூக் பென் முஸ்தபா, மோயிஸ் ஹூசைன், ஆமென் மத்லோத்தி.
தடுப்பாட்டகாரர்கள் - ஹாம்தி நாகுயிஸ், டைலான் பிரான், ரேமி பெடோய், யோஹான் பெனலோனே, சியாம் பென் யூசப், ஒசாமா ஹதாதி, அலி மாலோல், யாசின் மெரியா
நடுகள வீரர்கள் - எல்லிஸ் சிக்ரி, மொகமத் ஆமினே பென் ஆமோர், காலெனே சாலாலி, பெர்ஜானி சாஸி, அஹமது கலீல், சயிபதீன் காவோய்.
முன்கள வீரர்கள் - பக்ருதீன் பென் யூசெப், ஆனிஸ் பாத்ரி, நாயிம் சிலிடி, பசீம் சிரார்பி, சபேர் காலிபா, வாபி காஸ்ரி.

Story first published: Monday, June 4, 2018, 10:39 [IST]
Other articles published on Jun 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+