Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை... இந்த முறையாவது வெல்லுமா.... துனீஷியாவுடன் மோதுகிறது இங்கிலாந்து!

Tunisia to meet England in the fifa world cup

வோல்கோகார்ட்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இதுவரை முதல் சுற்றைத் தாண்டாத துனீஷியாவுடன் மோதுகிறது முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. ஜி பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆடடத்தில் பெல்ஜியம், பனாமா மோதுகின்றன. அதற்கடுத்த ஆட்டத்தில் துனீஷியாவுடன் இங்கிலாந்து விளையாடுகிறது.
----
பிரிவு ஜி
இங்கிலாந்து - துனீஷியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி
----
* உலகக் கோப்பையில் இங்கிலாந்து இதுவரை விளையாடிய 62 ஆட்டங்களில் 11 ஆட்டங்களில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. வேறு எந்த அணிக்கும் இல்லாத விரும்பப்படாத சாதனை இது.

* உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே இங்கிலாந்து வென்றுள்ளது. 4ல் டிரா, 3ல் தோல்வி அடைந்தது.

* 1978ல் மெக்சிகோவுக்கு எதிராக துனீஷியா தனது முதல் வெற்றியை சுவைத்தது. அதன்பிறகு, இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.
--
முக்கிய வீரர்கள்

இங்கிலாந்து - கேப்டன் ஹாரி கேன், கடந்த நான்கு பிரீமியர் லீக் சீசன்களில் 105 கோல்கள் அடித்து, மிகச் சிறந்த வீரராக உள்ளார். உலகக் கோப்பையில் அது தொடருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

துனீஷியா - மிகவும் ஆக்ரோஷமான வீரரான வாபி காஸ்ரியின் உடல் நிலை அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நடுவர்களுடன் ஆக்ரோஷமாக சண்டைப் போடக் கூடியவர் என்ற கெட்டப் பெயரும் அவருக்கு உண்டு.
---
உலகக் கோப்பையை இதுவரை வென்றுள்ள 8 நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, 1966ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் சாம்பியனானது. அதன்பிறகு கோப்பையை தொட்டுவிடும் தூரத்தைக் கூட எட்டவில்லை.

ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு சீசனிலும் மிகவும் வலுவான அணி, கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று அந்த அணி கூறப்படும். அதுபோலவே ஒவ்வொரு உலகக் கோப்பையின்போது இங்கிலாந்து அணி மீது இதுபோன்ற எதிர்பார்ப்பு ஏற்படும். அது தொடர்கிறது.

உலகக் கோப்பையில் விளையாடும் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனீஷியா, தகுதிச் சுற்று ஆட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தது.

இதுவரை உலகக் கோப்பையில் 1978, 1998, 2002, 2006ல் விளையாடியது. ஆனால் முதல் பிரிவு சுற்று ஆட்டங்களிலேயே வெளியேறியது. பல முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளது அணியின் வலிமையை மேலும் குறைத்துள்ளது.

Story first published: Monday, June 18, 2018, 1:33 [IST]
Other articles published on Jun 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+