Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொலம்பியா காலிறுதிப் போட்டி: பிரேசில்தான் ஜெயிக்கும்! - ஜோதிடம் சொன்ன கபேகா

ரியோ டி ஜெனிரோ: உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவை எதிர்த்து விளையாடும் பிரேசில் வெற்றி பெறும் என்று 'கபேகா' ஆமை ஆருடம் கூறியுள்ளது.

ரசிகர்களின் கண்களுக்கு உற்சாக விருந்து படைத்து வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், காலிறுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் களைகட்டவுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

ரியோ டி ஜெனிரோவில் இரவு 9.30 மணிக்குத் தொடங்கும், காலிறுதிச் சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் பிரான்ஸ் 11 முறையும், ஜெர்மனி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 6 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.

நள்ளிரவில் மோதல்

நள்ளிரவில் மோதல்

போர்ட்டலேஸாவில் நள்ளிரவு 1.30 மணிக்கு ஆரம்பமாகும் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் பிரேசில் அணி, கொலம்பியாவை எதிர்கொள்கிறது.

பிரேசில் வெல்லும்

பிரேசில் வெல்லும்

இந்த காலிறுதிப் போட்டியில் பிரேசில் வெல்லும் என்று திருவாளர் ஆமையார் ஆருடம் கூறியுள்ளாராம்.

25 ஆட்டங்கள்

25 ஆட்டங்கள்

பிரேசில் - கொலம்பியா அணிகள் நேருக்கு நேர் விளையாடியுள்ள 25 ஆட்டங்களில் 15-ல், பிரேசில் அணியே வெற்றி கண்டுள்ளது.

8 ஆட்டங்கள் டிரா

8 ஆட்டங்கள் டிரா

கொலம்பியா 2 போட்டிகளில் மட்டுமே வெற்றியை வசமாக்கியுள்ளது. 8 ஆட்டங்கள் வெற்றி தோல்வியின்றி டிராவில் நிறைவடைந்துள்ளன.

ஆக்டோபஸ் ஜோசியம்

ஆக்டோபஸ் ஜோசியம்

கடந்த உலக கோப்பையில் ஜெர்மனி நாட்டின் "ஆக்டோபஸ்" பால் அனைத்து போட்டிகளிலும் வெற்றி தோல்விகளை சரியாக கணித்து தெரிவித்தது. இப்போது அது இறந்துவிட்டது. நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கணிக்க ஜெர்மனியின் யானையான "நெல்லி" கணிப்பு பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

ஆமை ஜோசியம்

ஆமை ஜோசியம்

இதற்கு போட்டியாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் பிரேசில் கபேகா என்ற 'கடல் ஆமையை' களத்தில் இறக்கிவிட்டுள்ளது.

பிரேசில் மீனை சாப்பிட்ட ஆமை

பிரேசில் மீனை சாப்பிட்ட ஆமை

ஆமையாரும் மீனை சாப்பிட்டு சமர்த்தாக ஆருடம் கூறி வருகிறார். காலிறுதிப் போட்டியில் பிரேசிலின் மீனை சாப்பிட்டு அந்த அணி வெல்லும் என்று கணித்துள்ளது.

அரையிறுதிக்குள் நுழையுமா?

அரையிறுதிக்குள் நுழையுமா?

இந்த கணிப்பு வெற்றி பெறும் பட்சத்தில் பிரேசில் அணி 11 வது முறையாக அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்புள்ளது. பிரேசில் அணி இதுவரை 5முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Story first published: Friday, July 4, 2014, 13:17 [IST]
Other articles published on Jul 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+