இட் ஈஸ் கோயிங் ஹோம்..... அரை இறுதியில் தோல்வியடைந்த இங்கிலாந்தை கலாய்க்கும் டுவிட்கள்!
Recommended Video

டெல்லி: ஃபிபா உலகக் கோப்பை அரை இறுதியில் இங்கிலாந்தை வென்று குரேஷியா முதல் முறையாக பைனல் நுழைந்துள்ளது. குரேஷியாவில் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணியை டுவிட்டர்வாசிகள் கிழி கிழி என்று கிழித்து வருகின்றனர்.
21வது ஃபிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, கோப்பையை வெல்லக் கூடிய அணிகளாக எதிர்பார்த்த அர்ஜென்டினா, பிரேசில் என, ஒவ்வொரு அணியாக வெளியேறின.
இட் ஈஸ் கமிங்க் ஹோம்' என்ற கோஷத்துடன், 1966ல் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து களமிறங்கியது. அடடா, கோப்பை நமக்கு கிடைத்துவிடும் என இங்கிலாந்து ரசிகர்களும் ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் கொண்டாட்டத்தில் இருந்தனர்.
லீக் சுற்று, நாக் அவுட், கால் இறுதி என அரை இறுதிக்கு நுழைந்து, இங்கிலாந்து அணி ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தது. அரை இறுதியில் குரேஷியாவை சந்தித்தது. நமக்குதான்டா கோப்பை என்று இங்கிலாந்து ரசிகர்களும் பசி பட்டினி பாராமல், அரை இறுதிப் போட்டியை பார்த்தனர்.
ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே கோலடித்து இங்கிலாந்து முன்னிலை பெற்றபோது, இட் ஈஸ் கமிங் ஹோம் என்று குதூகலத்தில் இருந்தனர். ஆனால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது 2-1 என வென்று குரேஷியா முதல் முறையாக பைனல் நுழைந்துவிட்டது. டுவிட்டர்வாசிகளும், இங்கிலாந்து அணியை கழுவி ஊத்துகின்றனர். சாம்பிள்கள் மட்டும் இங்கே
உதைத்து தள்ளியது
இங்கிலாந்து அணியை குரேஷியா உதைத்து தள்ளியது என்கிறார் இவர்.
கீப்பரின் முகத்தை பாருங்க
குரேஷியா கோலடிக்க இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டான் பிக்போர்டின் முகம் எப்படி மாறியது என்பதை பாருங்கள்.
வரும்... ஆனா வராது
இட் ஈஸ் கமிங்க் ஹோம் என்பதை இட் ஈஸ் நாட் கமிங் ஹோம் என, வரும் ஆனா வராது என்று குறிப்பிடுகிறார் இந்த டுவிட்டர்வாசி.
அழிக்கத் துவங்கினர்
இட் ஈஸ் கமிங்க் என்ற வாசகங்களை உடனடியாக அழிக்க ஆரம்பிங்கப்பா என்கிறார் இவர்


Click it and Unblock the Notifications