For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம போட்டிக்கு யாருப்பா அம்பயர்?.... லிஸ்ட் ரிலீஸ்!

சிட்னி: உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

மார்ச் 18ம் தேதி தொடங்கும் காலிறுதிப் போட்டிகளுக்கான நடுவர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. சிட்னியில் முதல் காலிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அதில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன.

Umpires for World Cup 2015 quarter-finals announced

முதல் போட்டிக்கான நடுவர்கள் விவரம்: கள நடுவர்கள் - ராட் டக்கர் (ஆஸி.), நிகெல் லாங் (இங்கிலாந்து), 3வது அம்பயர் - ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்கிலாந்து), 4வது நடுவர் ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட் (ஆஸ்திரேலியா), மேட்ச் ரெப்ரீ - டேவிட் பூன் (ஆஸ்திரேலியா).

2வது போட்டிக்கான நடுவர்கள்:

மார்ச் 19ம் தேதி நடைபெறும் இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது காலிறுதிப் போட்டிக்கான நடுவர்கள் விவரம். கள நடுவர்கள் - இயான் கோல்டு (இங்கிலாந்து), ஆலிம் தர் (பாகிஸ்தான்), 3வது நடுவர் - ஸ்டீவ் டேவிஸ் (ஆஸி.), 4வது நடுவர் - பால் ரீபல் (ஆஸி.), மேட்ச் ரெப்ரீ - ரோஷன் மகானமா (இலங்கை).

3வது போட்டிக்கான நடுவர்கள்:

மார்ச் 20ம் தேதி ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 3வது காலிறுதிப் போட்டிக்கான நடுவர்கள். கள நடுவர்கள் - மாராய்ஸ் எராஸ்மஸ் (தெ. ஆ), குமார் தர்மசேனா (இலங்கை). 3வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), 4வது நடுவர் - பில்லி பெளடன் (நியூசிலாந்து). மேட்ச் ரெப்ரீ - ரஞ்சன் மதுகல்லே (இலங்கை).

4வது போட்டிக்கான நடுவர்கள்:

மார்ச் 21ம் தேதி நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது காலிறுதிப் போட்டிக்கான நடுவர்கள் விவரம்: கள நடுவர்கள் - ரிச்சர்ட் கெட்டில்போரோ, ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட். 3வது நடுவர் - ராட் டக்கர், 4வது நடுவர் - நிகெல் லாங். மேட்ச் ரெப்ரீ - கிறிஸ் பிராட்.

Story first published: Monday, March 16, 2015, 14:05 [IST]
Other articles published on Mar 16, 2015
English summary
The International Cricket Council (ICC) today announced the match officials for the quarter-finals of the World Cup 2015. The last-8 phase will begin on March 18.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+