Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடி மன்னனுக்கு 100வது ஆட்டம்... சவுதிக்கு எதிராக வெற்றியை தொடருமா உருகுவே!

Uruguay to meet saudi arabia in the fifa world cup

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் ரஷ்யா 3-1 என எகிப்தை வென்றது. இன்று நடக்கும் ஆட்டத்தில் உருகுவே, சவுதி அரேபியா மோதுகின்றன.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. ஏ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சவுதி அரேபியா, உருகுவே சந்திக்கின்றன.
----
பிரிவு ஏ
உருகுவே - சவுதி அரேபியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி
----
ஏ பிரிவில் இதுவரை...

* ரஷ்யா 5-0 என சவுதி அரேபியாவை வென்றது
* உருகுவே 1-0 என்று எகிப்தை வென்றது
* ரஷ்யா 3-1 என எகிப்தை வென்றது.
ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் ரஷ்யா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உருகுவே 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எகிப்து மற்றும் சவுதி அரேபியா புள்ளிகள் ஏதும் பெறவில்லை.
-----
ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று ரஷ்யா ஆச்சரியப்பட வைத்தது.

ஏ பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் எகிப்தும் உருகுவேவும் மோதின. இதில் நட்சத்திர வீரர் மொகம்மது சாலாஹின் எகிப்தை 1- 0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.

நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ரஷ்யா 3-1 என எகிப்தை வென்று, புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

எகிப்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் உருகுவே அசத்தலாக விளையாடியது. ஆட்டத்தில் 58 சதவீத நேரம் முன்னாள் சாம்பியனான உருகுவே வசமே பந்து இருந்தது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 91வது நிமிடத்தில் உருகுவேயின் ஜோஸ் ஜிமனெஸ் அபாரமாக கோலடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

உருகுவே அணியின் லூயிஸ் சூரஸ்க்கு இது 100வது போட்டியாகும். 2010ல் காலிறுதியில் கானாவுக்கு எதிராக பந்தை கையால் தடுத்ததாக சஸ்பென்ட் செய்யப்பட்டார் சூரஸ். அதனால் அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

கடந்த உலகக் கோப்பையில் இத்தாலியின் குளோர்ஜியோ சீலினியை கடித்ததாக நான்கு மாதங்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதனால் உருகுவே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறியது. சவுதி அரேபியாவுக்கு எதிராக 100வது போட்டியில் விளையாடும் அவர் இதுபோன்ற வீரசாகசங்களில் ஈடுபட மாட்டார் என்று எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே முதல் ஆட்டத்தில் வென்றுள்ளதால், இந்தப் பிரிவில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க இன்றைய ஆட்டத்தில் உருகுவே முயற்சி செய்யும். அதனுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியா வலுவான அணியாக இல்லை. இருந்தாலும், இந்த உலகக் கோப்பையில் இதுவரை பல அதிர்ச்சிகள் நடந்துள்ளதால், இன்றைய ஆட்டத்திலும் ஏதாவது அதிர்ச்சியான முடிவு ஏற்படுமா என்று பார்ப்போம்.

Story first published: Wednesday, June 20, 2018, 9:16 [IST]
Other articles published on Jun 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+