Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடாமல் முயற்சித்த உருகுவே.. கடைசி வரை போராடிய தென் கொரியா.. இறுதியில் டிராவில் முடிந்த ஆட்டம்!

தோஹா: உருகுவே - தென் கொரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கோல் எதுவும் அடிக்கப்படாததால் டிராவில் முடிவடைந்துள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எச் பிரிவில் உள்ள உருகுவே அணியை எதிர்த்து தென் கொரியா களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் பலம்வாய்ந்த உருகுவே அணியை தென் கொரியா எப்படி சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து உருகுவே அணி 4-3-3 என்ற ஃபார்மேஷனிலும், தென் கொரியா அணி 4-2-3-1 என்ற ஃபார்மேஷனிலும் களமிறங்கியது. தொடக்கம் முதலே உருகுவே அணி அட்டாக் செய்தது. அதனை தென் கொரியா அணியின் டிஃபெண்டர்கள் லாவகமாக தடுத்து கவுன்ட்டர் அட்டாக் செய்து வந்தனர்.

Uruguay vs South Korea Match ends in a Draw in FIFA World cup 2022

இரு அணி வீரர்களும் முதல் பாதியில் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்ற நிலையிலேயே முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தொடர்ந்து போராடினர்.

இருப்பினும் இரண்டாம் பாதி முடிவில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் உருகுவே அணி 547 பாஸ்களையும், தென் கொரியா அணி 419 பாஸ்களையும் அடித்துள்ளது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்துள்ளதால், இதே பிரிவில் உள்ள போர்ச்சுகல் - கானா அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, November 24, 2022, 20:45 [IST]
Other articles published on Nov 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+