Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சவுதியை வென்றது உருகுவே... இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது ரஷ்யா மற்றும் உருகுவே!

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் ஏ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் உருகுவே 1-0 என சவுதி அரேபியாவை வென்றது. இதன் மூலம் ரஷ்யா மற்றும் உருகுவே அடுத்தச் சுற்றுக்கு நுழைந்தன. ஏ பிரிவில் எகிப்து மற்றும் சவுதி அரேபியா வெளியேறின.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

Uruguay- Saudi

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. ஏ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 1-0 என உருகுவே வென்றது. அதையடுத்து ரஷ்யா மற்றும் உருகுவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறின. இரண்டு தோல்விகளை சந்தித்த சவுதி அரேபியா மற்றும் எகிப்து பிரிவுச் சுற்றிலேயே வெளியேறுகின்றன.
----
பிரிவு ஏ
உருகுவே - சவுதி அரேபியா
1 - 0
----
ஏ பிரிவில் இதுவரை...

* ரஷ்யா 5-0 என சவுதி அரேபியாவை வென்றது
* உருகுவே 1-0 என்று எகிப்தை வென்றது
* ரஷ்யா 3-1 என எகிப்தை வென்றது.
* உருகுவே 1-0 என சவுதி அரேபியாவை வென்றது.

ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் ரஷ்யா மற்றும் உருகுவே தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த எகிப்து மற்றும் சவுதி அரேபியா போட்டியில் இருந்து வெளியேறின.
-----
ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று ரஷ்யா ஆச்சரியப்பட வைத்தது.

ஏ பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் எகிப்தும் உருகுவேவும் மோதின. இதில் நட்சத்திர வீரர் மொகம்மது சலாவின் எகிப்தை 1- 0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.

நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ரஷ்யா 3-1 என எகிப்தை வென்று, புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

இந்த நிலையில், உருகுவே மற்றும் சவுதி அரேபியா இன்று நடந்த ஆட்டத்தில் விளையாடின. உருகுவே அணியின் லூயிஸ் சூரஸ்க்கு இது 100வது போட்டியாகும். இன்றைய ஆட்டத்தில் அவர் கோலடிக்க 1-0 என முன்னாள் சாம்பியன் உருகுவே வென்றது.

இதன் மூலம் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ள ரஷ்யா மற்றும் உருகுவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. அதே நேரத்தில் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த எகிப்து மற்றும் சவுதி அரேபியா பிரிவு சுற்றிலேயே வெளியேறுகின்றன.

Story first published: Wednesday, June 20, 2018, 22:39 [IST]
Other articles published on Jun 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+