Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அந்த பெனால்டி" அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் அணி.. டிராவில் முடிந்த முக்கிய ஆட்டம்!

தோஹா: அமெரிக்கா - வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்துள்ளது.

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா - வேல்ஸ் அணிகள் மோதின. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பின் வேல்ஸ் அணி உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்கியதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால் அமெரிக்கா அணியின் ஆக்ரோஷமான ஆட்டம், தொடக்கம் முதலே வேல்ஸ் அணியை திக்குமுக்காட வைத்தது. எந்த அளவிற்கு அமெரிக்கா அணி ஆக்ரோஷம் காட்டியது என்றால், 13வது நிமிடத்திற்குள்ளாகவே அந்த அணியின் இரு வீரர்களுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை வழங்கப்பட்டது.

அமெரிக்கா கோல்

அமெரிக்கா கோல்

தொடர்ந்து, ஆட்டத்தில் முதல் கோல் அடிக்க அமெரிக்கா அணி எடுத்த முயற்சிகளுக்கு 36வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் டிமோதி வியா அசாதாரண கோலை அடித்து, அமெரிக்கா அணிக்கு 1-0 என்று முன்னிலை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து முதல் பாதியில் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை.

தாக்குதல் ஆட்டம்

தாக்குதல் ஆட்டம்

இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் வேல்ஸ் அணியும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் அடிக்க எடுத்த முயற்சிகள், கோல் கீப்பர்கள் தடுக்கப்பட்டது. ஆனாலும் அமெரிக்காவின் தடுப்பாட்ட வீரர்களை தகர்த்து பந்தை கொண்டு செல்ல வேல்ஸ் அணி வீரர்கள் தொடர்ந்து போராடினர்.

பெனால்டி வாய்ப்பு

பெனால்டி வாய்ப்பு

இந்த நிலையில் 81வது நிமிடத்தில் அமெரிக்கா செய்த தவறால், வேல்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட வேல்ஸ் அணி, பாலே கோல்கீப்பரை கடந்து பந்தை கோல் போஸ்ட்டிற்குள் கொண்டு சென்றார். இதனால் மைதானத்தில் இருந்த வேல்ஸ் அணி ரசிகர்கள் உற்சாகம் பேரொலியாக எதிரிலித்தது. இதன் மூலம் ஆட்டத்தில் 1-1 என்று சமநிலை ஏற்பட்டது.

ஆட்டம் டிரா

ஆட்டம் டிரா

அதன் பின்னர் அமெரிக்கா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை வேல்ஸ் அணி எளிதாக தடுத்தது. இரண்டாம் பாதி ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வர, கூடுதலாக 9 நிமிடங்கள் நேரம் வழங்கப்பட்டது. இருந்தும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் அமெரிக்கா - வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

Story first published: Tuesday, November 22, 2022, 7:47 [IST]
Other articles published on Nov 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+