Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடாமல் முயற்சித்த ஈரான்.. தடுத்துக்கொண்டே இருந்த அமெரிக்கா.. இறுதியில் யாருக்கு வெற்றி?

தோஹா: ஈரான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் பிரிக்கப்பட்ட உடனே ரசிகர்களிடையே அதிக பேசுபொருளான குரூப் பி பிரிவில் இருந்த அணிகள் தான். ஏனென்றால் அரசியல் ரீதியாக மோதிக் கொள்ளும் ஈரான் - அமெரிக்கா நேருக்கு நேர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மோத இருந்தது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த இரு அணிகள் 1998ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் மோதிக்கொண்டது. அப்போது அமெரிக்காவின் அன்றைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் ஈரான் உடனான சுமூக பேச்சுவார்த்தைக்கு போட்டியை பயன்படுத்த ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது. தற்போதும் ஈரான் - அமெரிக்கா அணிகள் மோதி வரும் நிலையில், இந்தப் போட்டிக்கு இரு நாட்டு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

முதல் பாதி ஆட்டம்

முதல் பாதி ஆட்டம்

அதுமட்டுமல்லாமல் முந்தைய போட்டியில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அதேபோல் வலிமை வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை அமெரிக்கா டிரா செய்திருந்தது. இதனால் இரு அணிகளும் இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய தேவையில் இருந்தன.

காத்திருந்த அதிர்ச்சி

காத்திருந்த அதிர்ச்சி

தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. இதன் பலனாக 11வது நிமிடத்திலேயே அமெரிக்கா அணியின் புலிசிக் அடித்த ஹெட்டர், ஈரான் அணியின் கோல்கீப்பர் பெய்ரான்வன்ட் தடுத்து நிறுத்தினார். இருப்பினும் அமெரிக்கா அணி தொடர்ந்து அட்டாக் செய்தது. இதன் பலனாக 38வது நிமிடத்தில் புலிசிக் முதல் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அமெரிக்கா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

முதல் பாதி

முதல் பாதி

அதேபோல் கோல் அடித்தபோது ஈரான் கோல்கீப்பர் உடனான மோதலால், அமெரிக்காவின் புலிசிக் காயம் காரணமாக களத்தில் இருந்து சிறிது நேரம் வெளியேறினார். இதனிடையே முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் அமெரிக்கா அணி 2வது கோலை அடித்தது. ஆனால் அது ஆஃப் சைடாக மாறியது. இதன் பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 போராடிய ஈரான்

போராடிய ஈரான்

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஈரான் அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. முந்தைய போட்டிகளில் கோல் அடித்த தரேமி , மீண்டும் கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அதனை அமெரிக்கா தடுப்பாட்ட வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனிடையே மைதானத்தில் இருந்த ஈரான் ரசிகர்கள், வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் ஒலி எழுப்ப தொடங்கினர். இதனால் ஆட்டம் இன்னும் பரபரப்பானது.

தொடர்ந்த பரபரப்பு

தொடர்ந்த பரபரப்பு

பின்னர் 81வது நிமிடத்தில் ஈரான் அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை, அமெரிக்கா வீரர்கள் தடுத்தனர். தொடர்ந்து இரண்டாம் பாதி நேரம் முடிவுக்கு வந்த நிலையில், கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் கோல் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈரான் வீரர்கள் தீவிரமாக முயற்சித்தனர்.

 அமெரிக்கா வெற்றி

அமெரிக்கா வெற்றி

இருப்பினும் இறுதியாக அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அமெரிக்கா அணி வலிமையான நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 30, 2022, 6:47 [IST]
Other articles published on Nov 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+