Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்காவை ஓட ஓட விரட்டி அடித்த பெல்ஜியம்.. உலகக்கோப்பையில் வெறியாட்டம்.. காலிறுதிக்கு தகுதி

சியாட்டில்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்த சிபாரிசுகளையும் மீறி, அமெரிக்க அணியை 4-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் காலிறுதி கனவை பெல்ஜியம் தகர்த்து எறிந்தது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, அமெரிக்க வீரர் போலரின் பலோகனின் சிவப்பு அட்டைத் தடையை நீக்க அதிபர் டிரம்ப் பிஃபா தலைவரிடம் போன் செய்து அழுத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பெல்ஜியத்தின் எதிர்ப்பையும் மீறி தடை செய்யப்பட்டு இருந்த பலோகன் அமெரிக்க அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். ஆனால், இப்போட்டியில் பலோகனால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

USA vs Belgium Belgium Crushes USA 4-1 to Claim Quarter-Final Spot Rendering Donald Trump s FIFA Intervention Fruitless

சியாட்டில் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 9-வது நிமிடத்திலேயே பெல்ஜியத்தின் சார்லஸ் டி கெட்டலாரே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் அமெரிக்காவின் மாலிக் டில்மேன் ஒரு ஃப்ரீ-கிக் மூலம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். ஆனால், அடுத்த 2 நிமிடங்களிலேயே (33-வது நிமிடத்தில்) கெட்டலாரே தனது இரண்டாவது கோலை அடித்து பெல்ஜியத்தை மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அமெரிக்க கோல்கீப்பர் மாட் ப்ரீஸ் செய்த தவறால், பெல்ஜியத்தின் ஹான்ஸ் வனகென் 57-வது நிமிடத்தில் சுலபமாக ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 3-1 என மாற்றினார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய அனுபவ வீரர் ரொமேலு லுகாகு 4-வது கோலை அடித்து பெல்ஜியத்தின் 4-1 என்ற வெற்றியை உறுதி செய்தார்.

கண்ணீருடன் நின்ற ரொனால்டோ.. கட்டிப்பிடித்த யமால்.. உலகக்கோப்பையில் நெகிழ்ச்சி சம்பவம்

கண்ணீருடன் நின்ற ரொனால்டோ.. கட்டிப்பிடித்த யமால்.. உலகக்கோப்பையில் நெகிழ்ச்சி சம்பவம்

இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெல்ஜியம் எதிர்கொள்ளவுள்ளது. ஸ்பெயின் அணி தனது ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் போர்ச்சுகலை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 7, 2026, 8:52 [IST]
Other articles published on Jul 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+