Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொனால்டோ சர்ச்சை விவகாரம்.. ஆதரவாக வந்த பீட்டர்சன்.. இன்ஸ்டாவில் விராட் கோலி அளித்த லைக்!

டெல்லி: நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆதரவாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சனின் பேச்சிற்கு, இந்திய வீரர் விராட் கோலி ஆதரவு அளித்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக மக்களால் பின் தொடர்பாளர்களை வைத்துள்ளவர்.

சமகால கால்பந்து விளையாட்டின் தூதுவராகவே ரொனால்டோ திகழ்ந்து வருகிறது. இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் 2009ம் ஆண்டு முதல் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, 2018ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக விளையாடினார்.

சர்ச்சை

சர்ச்சை

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் தனது தாய் வீடான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட தொடங்கினார். நடப்பு கால்பந்து சீசனில் அந்த அணிக்காக பல்வேறு போட்டிகளில் ரொனால்டோ களமிறக்கப்படவில்லை. இதனால் அணிக்குள் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று ரசிகர்கள் பேச தொடங்கினர்.

ரொனால்டோ பேச்சு

ரொனால்டோ பேச்சு

இதனிடையே பியர்ஸ் மோர்கனுக்கு அளித்த நேர்காணலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அதில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளரான எரிக் டென் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. அவர் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

மான்செஸ்டர் யுனைடெட் அறிவிப்பு

மான்செஸ்டர் யுனைடெட் அறிவிப்பு

இதுமட்டுமல்லாமல் கிளேசர் குடும்பம், முன்னாள் வீரர் ரூனி உள்ளிட்ட ஏராளமானோரை கடுமையாக விமர்சித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் நேற்றிரவு சுமூக ஒப்பந்தம் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் அறிவித்தது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரொனால்டோ பற்றி பீட்டர்சன்

ரொனால்டோ பற்றி பீட்டர்சன்

இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் ரொனால்டோவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுதொடர்பாக பீட்டர்சன் கூறுகையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இடமான மைதானத்தில் மகிழ்ச்சியின்றி இருந்துள்ளார். விளையாட்டில் சாதித்ததன் காரணமாக அவர் மரியாதைக்குரியவர் என்று நான் நினைக்கிறேன். கால்பந்து விளையாட்டை விளையாடிய சிறந்த கால்பந்து வீரர்.

விராட் கோலி ஆதரவு

விராட் கோலி ஆதரவு

தன்னை மான்செஸ்டர் யுனைடெட் அணி நம்பவில்லை என்று ரொனால்டோ கூறியது உண்மையாக இருந்தால், மன்னிக்கவே முடியாது. ரொனால்டோ கூறியதை உண்மை என்று கூறவில்லை. ஆனால் அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி லைக் செய்து ரொனால்டோவுக்கு ஆதரவளித்துள்ளார். விராட் கோலி ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Wednesday, November 23, 2022, 18:22 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+