Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகமே எங்களுக்கு துணை.. உலகக்கோப்பையின் 'ராக்கி' மொராக்கோ அணி தான்.. பயிற்சியாளர் வாலிட் நம்பிக்கை!

தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பையை மொராக்கோ அணி கைப்பற்றுவதற்கு உலகமே ஆதரவாக இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ராகுய் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ராக்கி பாய் யஷ் என்றால் சர்வதேச சினிமாவின் ராக்கி பாய் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் தான். குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ராக்கி படம், இன்றும் ரசிகர்களுக்கு ஃபேவரைட்.

அந்த படம் பார்க்கும் அனைவரும் எப்படி சில்வஸ்டர் ஸ்டாலோனுக்கு வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்பட்டாளர்களோ, அதேபோல் மொராக்கோ அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று உலகின் ஏராளமான ரசிகர்கள் ஆதரவாக இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ராகுய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 ஏன் மொராக்கோ வெற்றி முக்கியம்?

ஏன் மொராக்கோ வெற்றி முக்கியம்?

பிரேசில் வீழ்த்தி குரோஷியா அணி அரையிறுதிக்கு முன்னேறியதை விடவும், போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ அணியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 92 ஆண்டு கால உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாகஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு அணி அரையிறுதி தகுதி பெற்றுள்ளது.

 அரையிறுதியில் மொராக்கோ

அரையிறுதியில் மொராக்கோ

நட்சத்திர வீரர்கல் நிரம்பி இருந்த போர்ச்சுகலை அணியை திறமையை மட்டுமே நம்பி வந்த மொராக்கோ அணி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு மொராக்கோ வீரர்கள் பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மொராக்கோ அணி

மொராக்கோ அணி

மொராக்கோ அணியின் வெற்றி குறித்து வாலிட் ரெக்ராகுய் கூறுகையில், கனவுடன் வந்த மொராக்கோ அணி, தற்போது உலகம் முழுவதும் ரசிகர்களை வென்றுள்ளது. பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் அணி நட்சத்திரங்கள் நிறைந்த அணியை வீழ்த்தி காட்டியுள்ளோம். இந்த உலகக்கோப்பைத் தொடரில் அனைவருக்கும் பிடித்த அணியாக மாறி இருக்கிறோம்.

உலகக்கோப்பையின் ராக்கி

உலகக்கோப்பையின் ராக்கி

அதிக திறமை வாய்ந்த வீரர்களும், பணமும் இல்லாமல் வெற்றியை பெற முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்துள்ளோம். எங்கள் மக்களுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்திற்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளோம். ராக்கி படத்தை பார்க்கும் போது, நம்மை அறியாமல் ராக்கிக்கு ஆதரவு அளிப்போம். அதுபோல் இந்த உலகக்கோப்பைத் தொடரின் ராக்கியாக உருவெடுத்துள்ளோம்.

 மொராக்கோவுக்கு உலகமே ஆதரவு

மொராக்கோவுக்கு உலகமே ஆதரவு

இப்போது மொராக்கோ அணிக்கு ஆதரவாக உலகமே இருக்கிறது. இதுவரை எந்தவொரு போட்டியின் முடிவுக்கும் நான் கண் கலங்கியதே கிடையாது. ஆனால் போர்ச்சுகல் அணியுடனான போட்டியின் இறுதி விசில் ஊதப்பட்ட பின், என் கண்கள் கலங்கின. எப்போதும் மனதளவில் நாம் திடமாகவும், உறுதியாகவும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக வீரர்கள் முன் எனது உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டேன்.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

ஆனால் உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறுவது சாதாரண விஷயமல்ல. இங்கு வரும்போது அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் தான் உணர்வுகள் அதிகமாகி, கண்கள் கலங்குகின்றன என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து - பிரான்ஸ் இடையிலான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி, உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் மொராக்கோ அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 11, 2022, 7:42 [IST]
Other articles published on Dec 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+