Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எம்பாப்பே மட்டுமா.. ஒரு படையே இருக்கு.. திட்டமெல்லாம் வேலைக்கு ஆகாது.. மொராக்கோ கோச் ஓபன் டாக்!

தோஹா: நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியில் எம்பாப்பே மட்டுமல்லாமல் நட்சத்திர வீரர்கள் கொண்ட ஒரு படையே இருப்பதாக மொராக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ராகுய் தெரிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மொராக்கோ அணி முன்னேறி சாதனை படைத்துள்ளது. நாளை நடக்க உள்ள இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து மொராக்கோ அணி விளையாட உள்ளது.

இந்த உலகக்கோப்பையில் மொராக்கோ அணி இதுவரை 5 கோல்களை அடித்து ஒரே ஒரு கோலை மட்டுமே எதிரணிக்கு வழங்கியிருக்கிறது. அந்த ஒரு கோலுமே 'Own Goal' ஆக அமைந்ததுதான்.

மொராக்கோ அணி

மொராக்கோ அணி

கிட்டத்தட்ட மொராக்கோ அணியின் வீரர்களில் பெரும்பாலானோர் தடுப்பாட்டத்தில் கில்லாடிகளாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கோல் கீப்பர் யாசீன் போனோ இந்த உலகக்கோப்பையின் தலைசிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராக இருக்கிறார். அதேபோல் அட்டாக்கில் சியேச், என்நைசரி என பல வித்தைக்காரர்களை கொண்ட அணியாகவே மொராக்கோ இருக்கிறது.

பிரத்யேக திட்டம்?

பிரத்யேக திட்டம்?

இந்த நிலையில் மொராக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ராகுய் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பேவுக்கு எதிராக பிரத்யேக திட்டம் எதுவும் நாங்கள் செய்யவில்லை. ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், எம்பாப்பே எதுவும் செய்யாமலேயே பிரான்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

பிரான்ஸ் படை

பிரான்ஸ் படை

எம்பாப்பே மட்டுமல்லாமல் கிரீஸ்மேன், ஜீரூட், டெம்பெல் என உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஏராளமானோர் பிரான்ஸ் அணியில் உள்ளனர். அதனால் தனி ஒரு வீரருக்கு என்று திட்டம் தீட்டினால், அது மாபெரும் தவறாக இருக்கும். நாங்கள் எங்களின் ஆட்டம் மூலம் பிரான்ஸ் அணிக்கு தொல்லை கொடுப்போம். என்னைவிடவும் ஹக்கிமிக்கு எம்பாப்பேவை நன்றாக தெரியும்.

 எம்பாப்பே - ஹக்கிமி

எம்பாப்பே - ஹக்கிமி

எம்பாப்பேவுடன் ஒவ்வொரு நாளும் பயிற்சி மேற்கொண்டவர் என்பதால், அவரை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஹக்கிமிக்கு தெரிந்திருக்கும். அதேபோல் ஹக்கிமி உலகத்தரம் வீரர். எம்பாப்பே - ஹக்கிமி இடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கும் ஆர்வமாக இருக்கும். அதேபோல் மொராக்கோ அணியில் ஏராளமான வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் மொராக்கோ அணியின் மருத்துவக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

 வாலிட் நம்பிக்கை

வாலிட் நம்பிக்கை

கேப்டன் ரோமைன் மற்றும் நயீஃப் ஆகியோரை களமிறக்குவது குறித்து கடைசி நிமிடத்தில் தான் முடிவு எடுப்போம். அதேபோல் நாங்கள் தடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால் 70% பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, சில கோல்களை விட்டுக்கொடுத்தால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மொராக்கோ அணி வீரர்கள் அதீத பசியுடன் இருக்கிறார்கள். அது போதுமானதா என்பது தெரியவில்லை. ஆனால் வரலாற்றை மாற்றி எழுதும் அளவிற்கு எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.

Story first published: Tuesday, December 13, 2022, 22:31 [IST]
Other articles published on Dec 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+