Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"திரும்ப வருவோம்.. கெத்தா" உலகக்கோப்பை தோல்விக்கு பின் கிலியன் எம்பாப்பே கொடுத்த ஒற்றை பதில்!

தோஹா: உலகக்கோப்பை தோல்விக்கு பின் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே பதிவிட்ட ட்வீட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் வைப்பிலே தான் இன்றைய நாள் சென்று கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் அர்ஜென்டினாவின் அட்டாக்கும், கிலியன் எம்பாப்பே அசுரனாக ஆடிய ஆட்டமும் தான் பேச்சாக இருக்கிறது.

18 ஆண்டு கால மெஸ்ஸியின் கால்பந்து கனவு, வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. மறுபக்கம் 23 வயதிலேயே உலகக்கோப்பைத் தொடரில் 13 கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பேவின் அசாத்திய திறமையை நினைத்து உற்சாகம் பிறக்கிறது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். ஒரு கால்பந்து போட்டியால் மக்களுக்கு என்ன உணர்வை கொடுக்க முடியும் என்று இறுதிப்போட்டி மூலம் ஃபிஃபா நிரூபித்துள்ளது. எதற்காக ஐரோப்பாவும், தென் அமெரிக்காவும் கால்பந்தை வாழ்க்கையாகவும், கலாச்சாரமாகவும் கொண்டாடுகிறார்கள் என்பது இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு புரிந்துள்ளது.

எம்பாப்பேவுக்கு ஆறுதல்

எம்பாப்பேவுக்கு ஆறுதல்

நேற்றைய ஆட்டம் முடிவடைந்த பின் கிலியன் எம்பாப்பேவுக்கு ஏராளமான மக்கள் ஆறுதல் தெரிவித்தனர். ஏன் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நேரடியாக ஆறுதல் கூறினார். சமூக வலைதளங்களில் கிலியன் எம்பாப்பேவுக்கு ஏராளமான நாடுகளின் ஆறுதல் பதிவுகள் பறந்து வந்துகொண்டே இருக்கிறது.

எம்பாப்பே ட்வீட்

எம்பாப்பே ட்வீட்

இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணியிடம் அடைந்த தோல்வி குறித்து கிலியன் எம்பாப்பே ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உலகக்கோப்பைத் தொடரில் 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வென்ற கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை அருகில் நின்றிருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து, திரும்ப வருவோம் என்று ரசிகர்களுக்கு ஒற்றை வார்த்தையில் உற்சாகம் ஏற்படுத்தியுள்ளார்.

சாம்பியன் சாபம்

சாம்பியன் சாபம்

2018ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை வென்ற பிரான்ஸ் அணி, இம்முறை சாம்பியன் சாபத்தால் குரூப் சுற்றோடு வெளியேறும் என்று பலரும் கணித்தனர். ஆனால் அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் பென்சிமா, போக்பா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே, இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 19, 2022, 18:53 [IST]
Other articles published on Dec 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+