Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களோட பெஸ்ட் கொடுப்போம்... புதிய வீரர்கள் கொஞ்சம் டைம் ஆகும்... ஜாக்கிசந்த் விளக்கம்

பேம்போலிம் : கோவாவின் பேம்போலிம்மில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகளுக்கிடையிலான ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 28வது போட்டி இன்னும் சிறிது நேரத்தில் துவங்கவுள்ளது.

இந்த போட்டியில் தனது இரண்டாவது நேரடி வெற்றியை பெற ஜாம்ஷெட்பூர் எப்சி அணி தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிராக தங்களது சிறப்பான செயல்பாட்டை இன்றைய போட்டியில் வெளிப்படுத்துவோம் என்று ஜாம்ஷெட்பூரின் முக்கிய வீரர் ஜாக்கிசந்த் சிங் தெரிவித்துள்ளார்.

28வது போட்டி

28வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 28வது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் மும்பை சிட்டி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதவுள்ளன. 4 தொடர் வெற்றியுடன் முதலிடத்தில் உள்ள மும்பை அணியுடன் ஒரு வெற்றி மற்றும் 3 டிரா செய்துள்ள ஜாம்ஷெட்பூர் அணி விளையாடவுள்ளது.

சிறப்பாக விளையாடுவோம்

சிறப்பாக விளையாடுவோம்

ஜாம்ஷெட்பூர் தற்போது 6 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தங்களுடைய சிறப்பான செயல்பாட்டை இந்தப் போட்டியில் வெளிப்படுத்துவோம் என்று ஜாம்ஷெட்பூர் அணியின் முக்கிய வீரர் ஜாக்கிசந்த் தெரிவித்துள்ளார்.

சொதப்பும் குழு செயல்பாடு

சொதப்பும் குழு செயல்பாடு

வழக்கமாக மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் இவரது செயல்பாடு சிறப்பாகவே அமைந்துள்ளது. ஆயினும் குழுவாக வரும்போது ஜாம்ஷெட்பூர் வெற்றிக்காக போராடி வருகிறது. கடந்த சீசனில் எப்சி கோவா அணிக்காக விளையாடிய ஜாக்கிசந்த், தன்னுடைய சிறப்பான செயல்பாட்டின் மூலம் அந்த அணியின் வெற்றித் தருணங்களுக்கு கை கொடுத்தார்.

காத்திருக்கும் ஜாக்கிசந்த்

காத்திருக்கும் ஜாக்கிசந்த்

இந்நிலையில் வலிமையான அணிகளுடன் மோதுவது தனக்கு எப்போதும் பிடித்தமானது என்றும் அதனால் மும்பை அணியுடனான இன்றைய போட்டிக்காக காத்திருப்பதாகவும் ஜாக்கிசந்த் கூறியுள்ளார். மேலும் அணியில் புதிய வீரர்கள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 14, 2020, 23:32 [IST]
Other articles published on Dec 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+