Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிப்போம்னு நினைச்சோம்.. இப்படி ஆகிப் போச்சே.. கூடுதல் நேரத்தில் 2 கோல்.. மண்ணைக் கவ்விய எவர்டன்

லண்டன் : பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் வெஸ்ட் ஹாம் - எவர்டன் அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் ஹாம் அணி முதல் கோலை அடித்து இருந்த போதும் எவர்டன் அணி அதை போட்டி நேரத்தில் சமன் செய்தது.

அதன் பின் வெஸ்ட் ஹாம் அணி, கூடுதல் நேரத்தில் இரண்டு முறை கோல் அடித்து எவர்டன் அணியை வீழ்த்தியது. அந்த இரண்டு கோல்கள் மூலம் 3 - 1 என்ற கணக்கில் வென்றது வெஸ்ட் ஹாம்.

Kurt Zouma second from left celebrates West Ham s opener

எவர்டன் அணியின் ஸ்ட்ரைக்கர் பீட்டோ ஒரு கோல் அடித்த போதும் அந்த அணி தோல்வி அடைந்தது. அவர் அடித்த ஆட்டத்தின் முதல் கோலை ஆறு நிமிடங்களுக்குள் கர்ட் ஜூமா சமன் செய்தார்.

பின்னர் டோமாஸ் சூசெக் கூடுதல் நேரத்தில், 91 வது நிமிடத்தில் ஒரு அற்புதமான அவுட்-ஆஃப்-ஃபுட் ஸ்ட்ரைக் மூலம் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து எட்சன் அல்வாரெஸ் கோல் அடித்தார். அதன் மூலம் வெஸ்ட் ஹாம் அணி வெற்றி பெற்றது.

இந்த தோல்வியையும் சேர்த்து எவர்டன் அணி கடந்த 10 போட்டிகளாக தோல்வியை சந்தித்து உள்ளது. வெற்றி பெறவே முடியாத நிலையில் தவித்து வருகிறது அந்த அணி. மறுபுறம் வெஸ்ட் ஹாம் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது கடினம் என நினைத்த நிலையில் கூடுதல் நேரத்தில் கிடைத்த 2 கோல்கள் அந்த அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பின் வெஸ்ட் ஹாம் ரசிகர்கள் மைதானத்தில் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Story first published: Saturday, March 2, 2024, 23:09 [IST]
Other articles published on Mar 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+