Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோப்பையை வென்றால் ரூ.200 கோடி, கோல் அடித்தால் தங்க காலணி: கால்பந்து உலக கோப்பையில் பரிசு மழை

ரியோடி ஜெனிரோ: இருபதாவது, உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் 12 ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம்தேதி வரை பிரேசிலில் நடக்கின்றன. போட்டித்தொடர் முடிவடைந்ததும் பல பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். உலக கோப்பையின் வீச்சை வைத்து அதற்கான பரிசு தொகையும் மிகவும் அதிகமாகவே உள்ளது. அதுகுறித்த ஒரு சிறப்பு பார்வை.

What are the awards to be won at FIFA World Cup 2014?

அடக்க ஒடுக்கமான அணி

விளையாட்டு கோட்பாடுகளை ஒழுங்காக பின்பற்றி அடக்க ஒடுக்கமாக விளையாடும் அணிக்கு பேர்-பிளே என்ற விருது அளிக்கப்படும். விருதுடன் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கால்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்படும்.

தங்க காலணி

தங்க காலணி விருது அதிக கோல் அடிக்கும் வீரருக்கு கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே எண்ணிக்கையில் கோல் அடித்திருந்தால், அந்த வீரர்கள் கோல் அடிக்கும்போது எத்தனை உதவிகளை பெற்றனர் என்பது கணக்கில் கொள்ளப்படும். குறைவான உதவியுடன் கோல் அடித்த வீரர்களும் ஒரே எண்ணிக்கையில் இருந்தால், அப்போது மொத்த நிமிடங்கள் கணக்கில் எடுக்கப்பட்டு குறைந்த நேரத்தில் அதிக கோல் அடித்த வீரருக்கு தங்க காலணி விருது கிடைக்கும். அதிக கோல் அடித்து இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கு வெள்ளி காலணியும், மூன்றாம் இடம் பிடிக்கும் வீரருக்கு வெங்கல காலணியும் வழங்கப்படும்.

தங்க பந்து

மீடியாக்கள், ரசிகர்கள் எந்த வீரருக்கு அதிக ஆதரவு அளிக்கிறார்களோ, அவர்களுக்கு, தங்க பந்து விருது அளிக்கப்படும். இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு வெள்ளி பந்தும், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு வெங்கல பந்தும் அளிக்கப்படும்.

சிறந்த கீப்பருக்கு தங்க கையுறை

கால்பந்தாட்டத்தில் முக்கிய புள்ளி கோல்கீப்பர்தான். அவரை மையமாக கொண்டே ஆட்டம் நகரும். சிறந்த கோல் கீப்பருக்கு தங்க கையுறை விருது அளித்து கவுரவிக்கப்படும்.

இளம் சிங்கம் யாரு?

சிறந்த இளம் வீரருக்கான விருது புதுமுக வீரருக்கு கிடைக்கும். சிறந்த இளம் வீரரை கால்பந்தாட்ட சம்மேளன தொழில்நுட்ப ஆய்வு குழு தேர்வு செய்யும். இது தவிர கோப்பையை வெல்லும் அணிக்கும் பரிசு தொகை காத்திருக்கிறது.

அம்மாடியோவ்..

கோப்பையை வெல்லும் அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.200 கோடிக்கும் மேல். 2010ம் ஆண்டு உலக கோப்பையின்போது அளிக்கப்பட்ட பரிசு தொகையைவிட இது 17 சதவீத உயர்வாகும். 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணி 22 மில்லியன் அமெரிக்க டாலரும் பரிசு தொகையாக பெறும். காலிறுதிக்கு வரும் அணிகளுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளுக்கும் தலா 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையாக கிடைக்கும்.

Story first published: Thursday, June 5, 2014, 17:43 [IST]
Other articles published on Jun 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+