Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளில் பயன்படுத்தும் 'வேனிஷிங் ஸ்ப்ரே' என்றால் என்ன?

சா பாலோ: ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளில் பயன்படுத்தப்படும் வேனிஷிங் ஸ்ப்ரே என்றால் என்ன என்று தெரியுமா?

ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் முதன்முறையாக வேனிஷிங் ஸ்ப்ரே என்ற ஒருவகையான ஸ்ப்ரே பயன்படுத்தப்படுகிறது.

What is the 'vanishing spray' used in FIFA World Cup 2014?

ஃப்ரீ கிக்கின்போது பந்தை வைக்க வேண்டிய இடத்தில் ஸ்ப்ரேவை அடிக்கின்றனர். மேலும் பந்து மற்றும் அதை தடுத்து நிறுத்துபவர் இடையே சரியான தூரம் உள்ளதா என்பதை கணக்கிட்டு வேனிஷிங் ஸ்ப்ரேயை அடிக்கின்றனர்.

ஸ்ப்ரே அடித்த இடத்தில் ஒரு வெள்ளை கோடு தெரிகிறது. அந்த கோடு சிறிது நேரத்தில் தானாக மறைந்துவிடுகிறது.

இந்த ஸ்ப்ரேயை ஜப்பானைச் சேர்ந்த நடுவரான யூய்ச்சி நிஷிமுரா தான் உலகக் கோப்பை போட்டியில் முதன்முதலாக பயன்படுத்தியுள்ளார். உலகக் கோப்பை போட்டிகளின் துவக்கமாக பிரேசில் மற்றும் குரோஷியா இடையே நடந்த போட்டியில் தான் இந்த வேனிஷிங் ஸ்ப்ரே முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

வேனிஷிங் ஸ்ப்ரேயை 915 ஃபேர்ஃபிளே என்று உலகக் கோப்பையில் அழைக்கின்றனர். இந்த ஸ்ப்ரேயை கண்டுபிடித்தவர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், தொழில் அதிபருான பப்லோ சில்வா என்பவர்.

Story first published: Monday, June 16, 2014, 12:40 [IST]
Other articles published on Jun 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+