Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை கால்பந்து போட்டி.... எந்தெந்த நாடுகள் விளையாடுகின்றன தெரியுமா!

டெல்லி: ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா உள்பட மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கடுமையான தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று இவை உலகக் கோப்பைக்கு முன்னேறின.

21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலக்க கோப்பைக்கும் தகுதி பெற்றுள்ளன. பலவேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஐஸ்லாந்து மற்றும் பனாமா ஆகியவை முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளனன. இந்த ஆண்டு, ரஷ்யாவின் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடக்க உள்ளன.

208 நாடுகள் போட்டி

208 நாடுகள் போட்டி

இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் 2015ல் துவங்கியது. ரஷ்யாவைத் தவிர பிபாவில் உறுப்பினர்களாக உள்ள 208 நாடுகளும் தகுதிச் சுற்றில் பங்கேற்றன. ஜிம்பாப்வே, இந்தோனேஷியா ஆகியவை தகுதிச் சுற்றில் விளையாடுவதற்கு பிபா அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் கடைசியாக உறுப்பினர்களாக சேர்ந்த கிப்ரடார் மற்றும் கொசாவா ஆகியவை தகுதிச் சுற்றில் விளையாடின.

தகுதி பெற்ற நாடுகள்

தகுதி பெற்ற நாடுகள்

உலகெங்கும் உள்ள 5 கால்பந்து கூட்டமைப்புகள் நடத்திய தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று 31 நாடுகள் உலகக் கோப்பைக்கு முன்னேறன. ஆனால் மிகவும் புகழ்பெற்ற நான்கு முறை சாம்பியனான இத்தாலி, மூன்று முறை இரண்டாவது இடத்தைப் பிடித்த நெதர்லாந்து ஆகியவை உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை.

ஐரோப்பா ஆதிக்கம்

ஐரோப்பா ஆதிக்கம்

இந்த உலகக் கோப்பையில் ஐரோப்பாவைச் சேர்ந்த 14 நாடுகள் விளையாடுகின்றன. ஆசியாவில் இருந்து 5, ஆப்பிரிக்காவில் இருந்து 5, தென் அமெரிக்காவில் இருந்து 5, வட அமெரிக்காவில் இருந்து 3 நாடுகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.

விளையாடுவது யார்

விளையாடுவது யார்

ஆசியாவில் இருந்து ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா தகுதி பெற்றுள்ளன. ஆப்பிரிக்காவில் இருந்து எகிப்து, மொராக்கோ, நைஜீரிய, செனகல், துனீஷியா தகுதி பெற்றுள்ளன வட அமெரிக்காவில் இருந்து கோஸ்டாரிகா, மெக்சிகோ, பனாமா மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து அர்ஜென்டீனா, பிரேசில் கொலம்பியா, பெரு, உருகுவே ஆகியவை தகுதி பெற்றுள்ளன.

ஐரோப்பாவில் இருந்து போட்டியை நடத்தும் ரஷ்யா, பெல்ஜியம், குரேஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், செர்பியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகியவை தகுதி பெற்றன.

Story first published: Tuesday, May 22, 2018, 17:06 [IST]
Other articles published on May 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+