Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை கால்பந்து... எந்தெந்த அணிகள் யாருடன் மோதப் போகின்றன!

டெல்லி: ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் 14ம் தேதி துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் ரஷ்யாவைத் தவிர மற்ற 31 அணிகள் பல்வேறு தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம் தகுதி பெற்றுள்ளன.

which team in which group in the fifa world cup

மொத்தம் 62 போட்டிகள் நடக்க உள்ளன. இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், அந்தப் பிரிவில் உள்ள மற்ற அனைத்து அணிகளுடன் விளையாடும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் என, 16 அணிகள் அடுத்தக்கட்ட நாக் அவுட் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூன் 28 வரையில் நடக்கிறது. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் 30ல் துவங்குகிறது. கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. பைனல்ஸ் ஜூலை 15ம் தேதி நடைபெறுகிறது.

பிரிவுகள்

ஏ பிரிவு - ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே.
பி பிரிவு - போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ, ஈரான்.
சி பிரிவு - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு, டென்மார்க்.
டி பிரிவு - அர்ஜென்டீனா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா.
இ பிரிவு - பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, செர்பியா.
எப் பிரிவு - ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா.
ஜி பிரிவு - பெல்ஜியம், பனாமா, துனீஷியா, இங்கிலாந்து.
எச் பிரிவு - போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான்.

Story first published: Thursday, May 24, 2018, 17:12 [IST]
Other articles published on May 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+