For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபா உலகக் கோப்பை.... எந்தெந்தப் பிரிவில் யார் யார் ஸ்டிராங்க் யார் யார் வீக்!

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்க உள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகளில் எவை அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்க உள்ளது. கோப்பையை வெல்வதற்காக 32 அணிகள் மோத உள்ளன. இதில் எந்தெந்த அணிகளுக்கு அடுத்தச் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்பது குறித்த ஒரு அலசல்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெறுகிறது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

which teams will move to the next level in the fifa world cup

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முறையில் பிரிவுகளுக்குள் உள்ள அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று, அரை இறுதி, பைனல் ஆகியவை நாக்-அவுட் சுற்றில் நடக்கும்.

இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்த ஒரு அலசல்.

ஏ பிரிவு

ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே அணிகள் ஏ பிரிவில் உள்ளன. இதில் உருகுவே 1930, 1950ல் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தப் பிரிவில் உருகுவே மற்றும் எகிப்து அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன. சவுதி அரேபியா 3வது இடத்தையும், ரஷ்யா 4வது இடத்தையும் பிடிக்கும்.

பி பிரிவு

பி பிரிவில் போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ, ஈரான் அணிகள் உள்ளன. ஸ்பெயின் 2010ல் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தப் பிரிவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஈரான் மூன்றாவது இடத்தையும், மொராக்கோ நான்காவது இடத்தையும் பிடிக்கும்.

சி பிரிவு

பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு, டென்மார்க் ஆகியவை சி பிரிவில் உள்ளன. இதில் பிரான்ஸ் 1998ல் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தப் பிரிவில் இருந்து பிரான்ஸ் மற்றும் பெரு ஆகியவை அடுத்தச் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன. டென்மார்க் 3வது இடத்தையும், ஆஸ்திரேலியா நான்காவது இடத்தையும் பிடிக்கும்.

டி பிரிவு

அர்ஜென்டீனா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா ஆகியவை டி பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதில் அர்ஜென்டீனா 1978 மற்றும் 1986ல் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தப் பிரிவில் இருந்து அர்ஜென்டீனா கண்டிப்பாக அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். குரேஷியாவுக்கும் அடுத்தச் சுற்று வாய்ப்பு உள்ளது. நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் அதற்கடுத்த இடங்களைப் பிடிக்கும்.

இ பிரிவு

பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, செர்பியா ஆகியவை இ பிரிவில் உள்ளன. இதில் 1958, 1962, 1970, 1994, 2002 என பிரேசில் ஐந்து முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தப் பிரிவில் பிரேசில் கண்டிப்பாக அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். செர்பியா வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால், சுவிட்சர்லாந்துக்கு அடுத்தச் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. கோஸ்டாரிகா நான்காவது இடத்தைப் பிடிக்கும்.

எப் பிரிவு

ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா ஆகியவை எப் பிரிவில் உள்ளன. நடப்பு சாம்பியனான ஜெர்மனி 1954, 1974, 1990, 2014 என நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஜெர்மனி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இந்தப் பிரிவில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மெக்சிகோ மற்றும் ஸ்வீடன் இடையே கடும் போட்டி இருக்கும். தென்கொரியா நான்காவது இடத்தைப் பிடிக்கும்.

ஜி பிரிவு

பெல்ஜியம், பனாமா, துனீஷியா, இங்கிலாந்து ஆகியவை ஜி பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து 1966ல் கோப்பையை வென்றுள்ளது. இதில் பெல்ஜியம் முதலிடத்தைப் பிடிக்கும். இங்கிலாந்து இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். கடைசி இரண்டு இடங்களுக்கு துனீஷியா மற்றும் பனாமா இடையே போட்டி இருக்கும்.

எச் பிரிவு
போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான் ஆகியவை எச் பிரிவில் உள்ளன. இந்தப் பிரிவில் போலந்து மற்றும் கொலம்பியா அடுத்தச்
சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன. செனகல் மூன்றாவது இடத்தையும், ஜப்பான் நான்காவது இடத்தையும் பிடிக்கும்.

Story first published: Wednesday, June 13, 2018, 12:33 [IST]
Other articles published on Jun 13, 2018
English summary
Which teams will progress to the knock out round of fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+