Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொனால்டோ தான் காரணம் போல.. மெஸ்ஸி படையை அலறவிட்ட கெலியான் எம்பாப்பே.. வெளியான புகைப்படம் பின்னணி

பாரீஸ் : உலகின் மிக கடினமான விளையாட்டு தொடர்களில் ஒன்று உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ஆகும்.

இதில் 32 அணிகள் பங்கேற்று அதில் இறுதிச்சுற்றுக்கு செல்வது என்பதே மிகவும் கடினமான காரியம் ஆகும்.

ஆனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கெலியான் எம்பாப்பே தனது 24 வது வயதுக்குள் இரண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் விளையாடி அதில் அசத்தியிருக்கிறார்.

கூல்மேன் எம்பாப்பே

கூல்மேன் எம்பாப்பே

குறிப்பாக கால்பந்து உலகில் அனைத்து வீரர்களும் யாராவது இரண்டு வீரர்களுக்கு தான் ரசிகர்களாக இருப்பார்கள். அதில் ஒன்று மெஸ்ஸி, இன்னொன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் மெஸ்ஸிக்கு கடும் நெருக்கடி அளித்த எம்பாப்பே யாருடைய ரசிகராக இருப்பார் என்று ரசிகர்கள் தேடி வந்தனர்.இறுதிப்போட்டியில் மெஸ்ஸியுடன் விளையாடும்போது தான் ஒரு ஜாம்பவானுடன் மோதுகிறோம் என்ற எவ்வித அச்சமும் இன்றி சர்வசாதாரண கூல் மேனாக எம்பாப்பே விளங்கினார்.

ரொனால்டோ ரசிகன்

ரொனால்டோ ரசிகன்

மேலும் மெஸ்ஸி உலக கோப்பையை வென்று விடக்கூடாது என 200 சதவீத உழைப்பை களத்தில் வெளிப்படுத்தி கோல்களை அடித்தார். நாட்டிற்காக விளையாடுவதையும் தாண்டி ஒரு வெறி அவரிடம் இருந்தது.இந்த நிலையில் தான் தற்போது எம்பாப்பே ஒரு தீவிர கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சிறுவயதில் தனது அறை முழுவதும் ரொனால்டோவின் புகைப்படங்களை அவர் ஒட்டி வைத்திருக்கிறார்.

ஃபேன் பாய்

ஃபேன் பாய்

ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்று பலமுறை அவர் தன்னை வெளிகாட்டியிருக்கிறார். ரொனால்டோவை நேரில் சந்திக்கும் போதெல்லாம் ஒரு பேன் பாயாகவே மாறி சுற்றி இருக்கிறார். இதனால் இறுதிப் போட்டிக்கு முன்பு கூட ரொனால்டோவிடம் சில அறிவுரைகளை கூட எம்பாப்பே வாங்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகக்கோப்பையை மெஸ்ஸி வென்று விட்டால் ரொனால்டோவை விட ஒரு படி மேலே ஏறி விடுவார் என்று அனைவரும் அறிந்ததே .

போராடியதே அதுக்கு தான்?

போராடியதே அதுக்கு தான்?

அதை தடுக்கும் விதமாக களத்தில் எம்பாப்பே போராடி செயல் பட்டார். உலக கோப்பையை வெல்லாத நிலையில் எம்பாப்பே நாங்கள் மீண்டும் வருவோம் என்று ஒரே வரியில் ட்வீட் போட்டு தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் தனது 24 வது பிறந்த நாளை கொண்டாடும் எம்பாப்பேவிற்கு மெஸ்ஸி ரொனால்டோ என அனைத்து தரப்பு கால்பந்து ரசிகர்களுமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கால்பந்தில் பெரிய ஜாம்பவானாக விளங்க எம்பாபேக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, December 20, 2022, 17:09 [IST]
Other articles published on Dec 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+