Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து உலகை ஆளப்போகும் அரசன்.. போர்கண்ட சிங்கமாக தாக்கும் கிலியன் எம்பாப்பே.. யார் இவர்?

தோஹா: அர்ஜென்டினா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே கடந்து வந்த பாதை பற்றி பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் "Spine Tingling Moments" என்று கூறுவார்கள். அந்த வார்த்தைக்கான அர்த்தம், ஒவ்வொரு அர்ஜென்டினா அணி ரசிகர்களுக்கும், மெஸ்ஸியின் ரசிகர்களுக்கும் நேற்றிரவு கிடைத்திருக்கும்.

"போர்கண்ட சிங்கம் வழி கண்டு அஞ்சாது" என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு முறை அர்ஜென்டினா அணி பின் தங்கிய போதும், முன் நின்று வழிநடத்தினார் லயோனல் மெஸ்ஸி.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

முதல் 75 நிமிடங்கள் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம், பின்னர் பிரான்ஸ் அணியின் எழுச்சி, எம்பாப்பே என்னும் அசாதாரணன் செய்த போர் என்று உலகின் சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள் எழுதிய இறுதிக்காட்சியை போல் அமைந்திருக்கிறது ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி.

வருங்கால அரசன்

வருங்கால அரசன்

உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து கால்பந்து விளையாட்டின் வருங்கால அரசன் என்று உரக்க முழங்கியுள்ளார் கிலியன் எம்பாப்பே. 23 வயதாகும் இளம் வீரர், உலகக்கோப்பைத் தொடர்களில் 13 கோல்கள் அடித்து மாபெரும் சாதனையை நிகழ்ச்சியுள்ளார்.

எம்பாப்பே ஆயுதங்கள்

எம்பாப்பே ஆயுதங்கள்

19 வயதிலேயே பிரான்ஸ் அணிக்காக உலகக்கோப்பை வென்று கொடுத்தவர் என்பதால், அர்ஜென்டினா அணி ரசிகர்களுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. ஏனென்றால், ஸ்ட்ரைக்கருக்கு தேவையான ஃபெர்பக்சன், ஸ்கில், சரியான விஷன், ஃபிசிக் என ஃபார்வர்ட் ரோலில் ஆடும் வீரர்களின் அனைத்து ஆயுதங்களையும் கொண்டவர் கிலியன் எம்பாப்பே.

16 வயதில் ரூ.1,600 கோடி

16 வயதில் ரூ.1,600 கோடி

18 வயதில் சுமார் 180 மில்லியன் பவுண்டு கொடுத்து கிலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்தது பிஎஸ்ஜி அணி. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1,600 கோடி. 6 வயதிலேயே தந்தையிடம் கால்பந்து பயிற்சிகளை பெறத் தொடங்கியவர் எம்பாப்பே. 10 வயதுக்குள் உள்ளூர் அணியான ஏ.எஸ்.போண்டியின் நட்சத்திர வீரராக உருவெடுத்தார். அந்த அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்தவர்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டில் கால்பந்து உலகக் கோப்பையை வென்றபோது கிலியன் எம்பாப்பே 6 மாத குழந்தை. பாரிஸ் நகரிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் புறநகர் பகுதியான போண்டிதான் கிலியனின் பூர்வீகம். ஏழைகள் அதிகமாக வசிக்கும் அந்த பகுதி குற்றச் சம்பவங்களுக்கும், வன்முறைகளுக்கும் பெயர்பெற்றது.

எம்பாப்பே பூர்விகம்

எம்பாப்பே பூர்விகம்

அதனாலேயே மற்ற பகுதியில் இருந்து வருபவர்கள், போண்டி பகுதியைச் சேர்ந்தவர்களை கொஞ்சம் ஒதுக்கியே வைப்படுவார்கள். எம்பாப்பேயின் அப்பா வில்ஃபிரட் ஒரு கால்பந்து பயிற்சியாளர். அவரது குடும்பத்தினர் கேமரூன் நாட்டு வம்சா வழியைச் சேர்ந்தவர்கள். 16 வயதில் சர்வதேச போட்டிகளில் ஆடத் தொடங்கிய எம்பாப்பே, 2015-16 சீசனில் மொனாகோ அணியில் ஸ்குவாட் பிளேயராக இருந்தவர்.

16 வயதில் எம்பாப்பே

16 வயதில் எம்பாப்பே

அடுத்த சீசனில் ஃபால்காவோவின் ஸ்ட்ரைக் பார்ட்னரானார். லீக் -1 தொடரில் 15 கோல்கள், சாம்பியன்ஸ் லீகில் 6 கோல்கள் என அசத்த, கால்பந்து உலகின் ஒவ்வொரு கிளப்பும் இவரைக் கண்காணிக்கத் தொடங்கியது. இறுதியாக பிஎஸ்ஜி அணி அதிக விலை கொடுத்து வாங்கியது. 2018 உலகக் கோப்பையில் 4 கோல்களை அடித்தார் எம்பாப்பே.

எம்பாப்பேவின் சாதனைகள்

எம்பாப்பேவின் சாதனைகள்

சிறிய வயதில் உலகக்கோப்பையில் கோல் அடித்த பிரான்ஸ் வீரர் என்ற சாதனையையை எம்பாப்பே படைத்தார். அத்துடன் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பீலேவுக்கு பின் மிக இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 2018 உலகக்கோப்பையை வென்றபோது தனக்கு கிடைத்த மொத்த பரிசுப் பணத்தையும் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏழைக்குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செயல்படும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியவர்.

 ரொனால்டோ - எம்பாப்பே

ரொனால்டோ - எம்பாப்பே

அதுமட்டுமல்லாமல் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் எம்பாப்பேயின் ரோல் மாடல். கிட்டத்தட்ட அவரை போலவே தாக்குதல் பாணி ஆட்டத்தை கொண்டவர். 2018ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆடும்போது, ரொனால்டோவையே வீழ்த்தி திரும்பி பார்க்க வைத்தார். இதன் பின்னர் ரொனால்டோவே, "கால்பந்து உலகின் நிகழ்காலமாகவும், எதிர்காலமாகவும் எம்பாப்பே இருக்கிறார்" என்று பாராட்டி பெற்றார். கிட்டத்தட்ட ரொனால்டோ கூறிய வார்த்தைகள் உண்மையாக மாறியுள்ளது.

Story first published: Monday, December 19, 2022, 13:00 [IST]
Other articles published on Dec 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+