Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொனால்டோவா, மெஸ்ஸியா.. யாரு ராஜா.. நிஜமான ராஜா..?

Recommended Video

இறுதி லீக் போட்டியில் இன்று மோதுகிறது அர்ஜென்டினா- வீடியோ

மாஸ்கோ: கமல் பெருசா, ரஜினி பெருசா...விஜய் பெருசா, அஜீத் பெருசா.. அதே போலத்தான் கால்பந்திலும். பீலே பெருசா, மாரடோனா பெருசா.. என்று ஒருகாலத்தில் யுத்தமே நடந்தது. இப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ- லியோனல் மெஸ்ஸி முறை.

இருவரது ஆட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. அதில் பெரும்பாலும் ரொனால்டோ கால்தான் ஓங்கியிருக்கும். ஆனால் மெஸ்ஸி பிரியர்கள் விட மாட்டார்கள். எங்க தல மட்டும் என்ன தொக்கா என்று வரிந்து கட்டி வருவார்கள்.

இருவரில் யார் பெரியவர் என்பதை விட யாரால் இவர்கள் சார்ந்த அணிகளுக்கு சாதகம், லாபம் என்று பார்ப்பதே பொருத்தமாக இருக்கும். ஒரு குட்டி அலசல்.

பெனால்டி வாய்ப்புகள்

பெனால்டி வாய்ப்புகள்

பெனால்டி வாய்ப்புகளை சரியான முறையில் கோலாக்குவதில் யார் பெஸ்ட் என்று பார்த்தால் ரொனால்டோதான் முன்னணியில் இருக்கிறார். மெஸ்ஸியை விட இதில் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார் ரொனால்டோ.

அதிக கோல்கள் ரொனால்டோ

அதிக கோல்கள் ரொனால்டோ

ரொனால்டோ போர்ச்சுகல், ரியல் மாட்ரிட் மற்றும் மான்செஸ்டர்யுனைடெட்ட் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். மொத்தமாக 3 அணி போட்டிகளிலும் சேர்த்து இவருக்கு 133 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. அதில்110ஐ கோல்களாக்கியுள்ளார். வெற்றி சதவீதம் 82.7% ஆகும்.

இது மெஸ்ஸி மேஜிக்

இது மெஸ்ஸி மேஜிக்

மறுபக்கம் மெஸ்ஸி, அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். 107 பெனால்டி வாய்ப்புகள் இவருக்குக் கிடைத்தன. அதில் 82 ஐ கோல்களாக்கியுள்ளார். இவரது வெற்றி சதவீதம் 76.6% ஆகும்.

தொடரும் யுத்தம்

தொடரும் யுத்தம்

இது பெனால்டியை மட்டும் வைத்து செய்யப்பட்ட ஒரு குட்டி ஆய்வுதான். இருவரும் உச்ச ஸ்டார்களாக இருக்கும் வரை பல ரூபங்களில் இவர்கள் குறித்த ஒப்பீடுகளும், யார் பெரியவர் என்ற வாதமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

உதை தொடரட்டும்!

Story first published: Tuesday, June 26, 2018, 17:49 [IST]
Other articles published on Jun 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+