Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் விளையாடும் பெரும் பணக்கார வீரர் யார் தெரியுமா?

லண்டன்: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் விளையாடவிருக்கும் வீரர்களில் போர்சுக்கலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் பெரும் பணக்காரர் ஆவார்.

ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நாளை துவங்குகிறது. இந்நிலையில் வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்களில் பெரும் பணக்காரர்கள் 10 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலின் விவரத்தை பார்ப்போம்.

ரொனால்டோ

ரொனால்டோ

வெல்த் எக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் போர்ச்சுகலைச் சேர்ந்தவரும், ரியல் மேட்ரிட் அணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 230 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மெஸ்ஸி

மெஸ்ஸி

ரொனால்டோ அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்ஸி மற்றும் இங்கிலாந்தின் வேய்ன் ரூனியை விட பணக்காரர் ஆவார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்களில் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்களில் அதிகமானோர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.

ஸ்பெயின்

ஸ்பெயின்

வெல்த் எக்ஸ் பட்டியலில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரேயொரு வீரரின் பெயர் மட்டுமே உள்ளது. அவர் தான் பெர்னாண்டோ டோரஸ். அவரின் சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும்.

பிரேசில்

பிரேசில்

வெல்த் எக்ஸ் பட்டியலில் கால்பந்தாட்ட போட்டியை நடத்தும் பிரேசிலைச் சேர்ந்த ஒரு வீரரின் பெயர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 11, 2014, 18:03 [IST]
Other articles published on Jun 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+