Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாம்பியனானது பிரான்ஸ்... 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை... குரேஷியாவை 4-2 என வென்றது!

Recommended Video

குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ்- வீடியோ

மாஸ்கோ: கால்பந்து உலகக் கோப்பையை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வென்றது பிரான்ஸ். இன்று நடந்த பைனலில் குரேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது பிரான்ஸ். 1998க்குப் பிறகு, இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையை வென்றுள்ளது. முதல் முறையாக பைனலில் போட்டியிடும் குரேஷியா கடும் சவால் விடுத்து, அனைவரது பாராட்டையும் பெற்றது.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி துவங்கின. ஒரு மாதமாக பல்வேறு அதிர்ச்சிகள், ஆச்சரியங்களை சந்தித்த நிலையில், இன்று பைனல் நடந்தது. இதில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், முதல் முறையாக பைனல் நுழைந்துள்ள குரேஷியா மோதின.

மிகவும் பரபரப்பாக நடந்த பைனலில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. துவக்கத்தில் இருந்தே கோலடிக்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டன. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் குரேஷியாவின் மன்ட்ஜூகிக் சேம் சைடு கோலடிக்க, பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.

அதையடுத்து கோலடிக்கும் முயற்சியில் குரேஷியா தீவிரமாக இறங்கியது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், பெரிசிக் கோலடிக்க 1-1 என குரேஷியா சமநிலையை உருவாக்கியது.

கிரீஸ்மான் அபாரம்

கிரீஸ்மான் அபாரம்

இன்றைய ஆட்டத்தில் பந்து பெரும்பாலும் குரேஷிய அணியிடமே இருந்தது. இரு அணிகளும் மிகவும் சமபலத்துடன் மோதின. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிரீஸ்மான் கோலடிக்க பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது. முதல் பாதியின் இறுதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலையில் இருந்தது.

கலக்கிய போக்பா, மாப்பே

கலக்கிய போக்பா, மாப்பே

இரண்டாவது பாதி துவங்கியதும், இங்கிலாந்து மிகவும் தீவிரமாக விளையாடியது. ஆட்டத்தில் 59வது நிமிடத்தில் போக்பா, 65வது நிமிடத்தில் மாப்பே கோலடிக்க பிரான்ஸ் 4-1 என முன்னிலையை உயர்த்தியது. இந்த நிலையில் 69வது நிமிடத்தில் குரேஷியாவின் மன்ட்ஜூகிக் கோலடித்து முன்னிலையை குறைத்தார். அதன்பிறகு கோலடிக்கும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் கிடைக்கவில்லை. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது பிரான்ஸ்

20 ஆண்டுகளுக்குப் பிறகு

20 ஆண்டுகளுக்குப் பிறகு

1998ல் நடந்த உலகக் கோப்பையில் பிரான்ஸ் கோப்பையை வென்றது. அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வென்றுள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன.

தோற்றாலும் பாராட்டு

தோற்றாலும் பாராட்டு

இந்த உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத அணியாக குரேஷியா பைனலுக்கு நுழைந்தது. முதல் முறையாக பைனலில் விளையாடி, கடைசி வரை போராடி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Story first published: Sunday, July 15, 2018, 23:56 [IST]
Other articles published on Jul 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+