Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து உலகக் கோப்பையில் இந்தியா விளையாடுமா.... 2026க்கு தயாராகுமா!

டெல்லி: கடந்த மாதத்தில் இருந்து உலகெங்கும் பேசப்படும் ஒரு விஷயம் உலகக் கோப்பை கால்பந்து போட்டி. இந்த உலகக் கோப்பையில் பல ஜாம்பவான் அணிகள் விளையாடும் அதே நேரத்தில் குட்டி குட்டி அணிகளும் கலக்கி வருகின்றன. இந்தப் போட்டிகளை பார்க்கும்போது நம் அனைவருடைய மனதில் தோன்றும் ஒரே கேள்வி - இந்தியா எப்போது உலகக் கோப்பையில் விளையாடும்.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதே மிகப் பெரிய கவுரவமாகும். இதுவரை அந்த வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் மிக விரைவில் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பு இந்தியாவுக்கு வந்துள்ளது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, முறையாக பயிற்சி அளித்தால், அரசியல்வாதிகள் - அதிகாரிகள் குறுக்கீடுகள் இல்லாமல் இருந்தால், அதை எட்ட முடியும்.

இந்த உலகக் கோப்பையில் பனாமா, ஐஸ்லாந்து ஆகியவை அறிமுக அணிகளாக களமிறங்கின. 12 முறை தகுதிச் சுற்றுகளில் விளையாடி 13வது முறையாக உலகக் கோப்பைக்கு ஐஸ்லாந்து தகுதி பெற்றுள்ளது. பனாமாவுக்கு 11வது முறையில்தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

2026ல் விளையாட வாய்ப்பு

2026ல் விளையாட வாய்ப்பு

தற்போதைய நிலையில் 2026 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கலாம். ஆனால், அதற்கு மிகக் கடினமாக போராட வேண்டும். உலகத் தரவரிசையில் 173வது இடத்தில் இருந்த இந்தியா 97வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது நமது கால்பந்து அணி வேகமாக வளர்ந்து வருவதைக் காட்டியுள்ளது.

9 ஆசிய அணிகள்

9 ஆசிய அணிகள்

இந்த உலகக் கோப்பையில் 32 அணிகள் பங்கேற்றன. 2022ல் கத்தாரில் நடக்கும் போட்டியிலும் 32 அணிகளே பங்கேற்கும். அதே நேரத்தில் 2026ல் அமெரிக்காவில் நடக்கும் உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது ஆசியா கூட்டமைப்பில் இருந்து 5 அல்லது 6 அணிகளுக்கு உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கிறது. 2026ல் அது 8 அல்லது 9ஆக உயரும்.

இந்தியாவுக்கு முதல் வெற்றி

இந்தியாவுக்கு முதல் வெற்றி

ஃபிபாவின் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் ஆசியப் போட்டிகளில் விளையாடி வெல்லும் அணிகளுக்கு உலகக் கோப்பை போட்டிக்கு நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். 2019 ஜனவரியில் நடக்கும் ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு இந்தியா தற்போது தகுதி பெற்றுள்ளது.

தீவிர பயிற்சி தேவை

தீவிர பயிற்சி தேவை

கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியை கால்பந்துக்கு காட்டினால், அது வீரர்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமையும். இளைஞர்களுக்கும் அதில் ஆர்வம் ஏற்படும். 2026 உலகக் கோப்பையில் விளையாடும் இலக்கோடு, அதிக நாடுகளுடன், அதிலும் வலுவான நாடுகளுடன் நட்பு போட்டிகளில் விளையாடி பயிற்சி பெற வேண்டும். இதையெல்லாம் விட, ரசிகர்களின் ஆதரவு மிக முக்கியம். செய்வோமா!

Story first published: Saturday, July 7, 2018, 21:11 [IST]
Other articles published on Jul 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+