Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - குருதட்சணை அளிக்குமா ஈரான்!

Will Iran cross the first round atleast in this fifa world cup

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
---
நாடு : ஈரான்

பி பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 15ல் மொராக்கோ
ஜூன் 20ல் ஸ்பெயின்
ஜூன் 25ல் போர்ச்சுகல்

ஃபிபா தரவரிசை : 37

கடந்த உலகக் கோப்பை : 2014 (பிரிவு சுற்றில் வெளியேறியது)

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1978, 1998, 2006, 2014ல் முதல் சுற்று

முக்கிய வீரர்கள் : சர்தார் அஸ்மோன், சயீது இசதோலாஹி, மஹ்தி தரேமி

கோச் : கார்லோஸ் குயிஸ்ரோஸ்
---
இந்த உலகக் கோப்பைக்கு ஆசியாவில் இருந்து நுழைந்த முதல் அணி ஈரான். ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ள ஈரான், இதுவரை முதல் சுற்றைத் தாண்டியதில்லை.

போர்ச்சுகலைச் சேர்ந்த குயிஸ்ரோஸ், ரியல் மாட்ரிட் அணியின் கோச்சாக இருந்துள்ளார். 2008ல் மான்செஸ்டர்ஸ் யுனைடெட் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றபோது, துணை கோச்சாக இருந்தார்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் ஈரான் அணி எந்த நிலைக்கு முன்னேறினாலும், ஓய்வு பெறப் போவதாக ஏற்கனவே அவர் அறிவித்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றில் நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டீனா அணிக்கு தண்ணி காட்டியது ஈரான் அணி. கடைசியில் மெஸ்ஸி மேஜிக்கால் தோல்வியடைந்தது.

தற்போது அதிக அளவு இளம் வீரர்களுடன் ரஷ்யாவுக்கு வந்துள்ளது ஈரான். தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஒன்றில் கூட தோல்வியடையாத அணியாக உள்ளது. எதிரணிகளுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பையும் மிகவும் குறைவாகவே தந்துள்ளது.

இந்த உலகக் கோப்பையில் மிகவும் வலுவான ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ அணிகளுடன் பி பிரிவில் உள்ளது. முதல் முறையாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவதுடன், விலக உள்ள கோச்சுக்கு சிறந்த பரிசையும் அளிக்க ஈரான் முற்படும் என்று நம்பலாம்.

Story first published: Tuesday, June 12, 2018, 18:53 [IST]
Other articles published on Jun 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+