Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொராக்கோ போட்ட ஸ்பீட் பிரேக்கர்.... 2-2 என டிரா செய்தது ஸ்பெயின்.... நாக் அவுட் முன்னேறியது

காலினின்கிராட்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் மொராக்கோவின் கடுமையான சவாலை சமாளித்து 2-2 என டிரா செய்து பி பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் முன்னேறியது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்கியுள்ளன. இதில் பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் மொராக்கோவை சந்தித்தது ஸ்பெயின்.

ரொனால்டோவுடன் டிரா

ரொனால்டோவுடன் டிரா

பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது. ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது. அதற்கடுத்து போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது. ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது.

ஸ்பெயினுக்கு நல்ல வாய்ப்பு

ஸ்பெயினுக்கு நல்ல வாய்ப்பு

தற்போதைய நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

கோஸ்டா காப்பாற்றினார்

கோஸ்டா காப்பாற்றினார்

இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலும் ஸ்பெயின் முன்னாள் சாம்பியன் என்ற கெத்துடன் விளையாடவில்லை. போர்ச்சுகல்லுக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்தாலும், ரொனால்டோ என்ற தனிமனிதன் ஹாட்ரிக் கோலடித்து டிரா செய்தார். டியோஜோ கோஸ்டா 3 கோல்கள் அடித்து இதுவரை ஸ்பெயினை காப்பாற்றியுள்ளார்.

ஸ்பெயினுக்கு வாய்ப்பு

ஸ்பெயினுக்கு வாய்ப்பு

இன்று நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின், மொராக்கோவை சந்தித்தது. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் போதாயிப் கோலடிக்க மொராக்கோ முன்னிலை பெற்றது. 19வது நிமிடத்தில் ஸ்பெயினின் இஸ்கோ கோலடித்து சமநிலையை உருவாக்கினார். 81வது நிமிடத்தில் மொராக்கோவின் என் நேசிரி கோலடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது. கடைசியில் 91வது நிமிடத்தில் இயாகோ அஸ்பாஸ் கோலடிக்க ஸ்பெயின் 2-2 என டிரா செய்தது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் முன்னேறியது. இதே பிரிவில் இருந்து போர்ச்சுகல்லும் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.

Story first published: Tuesday, June 26, 2018, 9:17 [IST]
Other articles published on Jun 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+