Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - வலுவான அணிகளை சமாளிக்குமா அறிமுக அணி ஐஸ்லாந்து!

Will the debutant iceland make roads in the fifa world cup

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
---
நாடு : ஐஸ்லாந்து

டி பிரிவில் அர்ஜெனஅ"ஈனா, குரேஷியா, நைஜீரியா உடன் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 16ல் அர்ஜென்டீனா
ஜூன் 22ல் நைஜீரியா
ஜூன் 26ல் குரேஷியா

ஃபிபா தரவரிசை : 22

உலகக் கோப்பையில் இதுவரை : முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.

முக்கிய வீரர்கள் : கில்பி சிகுர்ட்சன், ஆரோன் குன்னர்சன், ஆல்பர்ட் குட்முன்ட்சன், பிர்கிர் பிஜார்னசன்

கோச் : ஹீமிர் ஹால்கிரிம்சன்
---
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் நாடுகளில், மக்கள் தொகையில் மிகவும் சிறிய நாடான ஐஸ்லாந்து டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றிருந்தாலும் அதிக திறமை கொண்ட, அதிரடி அணியாக உள்ளது.

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் ஐரோப்பிய அளவிலான முதல் பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததை ஐஸ்லாந்து. துருக்கி, குரேஷியா, உக்ரைன் போன்ற நாடுகளை சமாளித்து, உலகக் கோப்பைக்கு ஐஸ்லாந்து நுழைந்துள்ளது.

2016ல் நடந்த யூரோ கோப்பையில் இங்கிலாந்து அணியை வென்று காலிறுதிக்கு ஐஸ்லாந்து முன்னேறியது. அதுதான் ஐஸ்லாந்து அணிக்கு, மிகப் பெரிய போட்டிகளில் முதல் போட்டியாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, யாரும் எதிர்பார்க்காத அசுர வளர்ச்சியை ஐஸ்லாந்து கண்டு வந்துள்ளது. இளம் வீரர்கள் துடிப்புடன் இருப்பதால், இந்த உலகக் கோப்பையில் பல அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

டி பிரிவில் மிகவும் வலுவான ஆர்ஜென்டீனாவுடன் முதலில் மோதுகிறது. அதில் தோல்வியடைந்தால், நைஜீரியா மற்றும் குரேஷியாவை வென்றால் தான், அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியும்.

Story first published: Sunday, June 10, 2018, 13:57 [IST]
Other articles published on Jun 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+